அரசாங்கம் அமெரிக்காவுடன் எம்.சி.சி. என்ற மிலேனியம் சலென்ஞ் கோப்பரேஷன் உடன்படிக்கையை கைச்சாத்திட எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என சட்டமா அதிபர் திணைக்களம் உயர் நீதிமன்றத்துக்கு தெரிவித்துள்ளது.

அத்துடன் குறித்த ஒப்பந்தம் தொடர்பில் மீளாய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சட்டமா அதிபர் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

அரசாங்கம் அமெரிக்காவுடனான மிலேனியம் சலென்ஞ் கோப்பரேஷன் உடன்படிக்கையில் கைச்சாத்திடப் போகின்றது என்றும், அதற்கான திகதி தீர்மானிக்கப்பட்டு விட்டதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன. 

எனினும் இதற்கு ஆளும் தரப்பினர் மறுப்பு தெரிவித்து வந்திருந்த நிலையிலேயே சட்டமா அதிபர் திணைக்களம் இந்த அறிவிப்பினை உயர் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது.