பிரிட்டன் பொதுத்தேர்தல் முடிவுகள் : பிரதமர் போரிஸ் ஜோன்சன் கட்சி முன்னிலையில்!

Published By: R. Kalaichelvan

13 Dec, 2019 | 10:36 AM
image

பிரிட்டனில் 650 தொகுதிகளைக் கொண்ட பாராளுமன்றத்திற்கான பொதுத்தேர்தல் நேற்று இடம்பெற்றது.

பிரித்தானிய நேரப்படி காலை 7 மணிக்கு ஆரம்பமாகிய வாக்குப்பதிவு, இரவு 10 மணி வரை நடைபெற்றது. அதன்பின்னர் வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகின.

இந்த தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி, தொழிலாளர் கட்சி, தாராளவாத ஜனநாயகவாதிகள், ஸ்கொடிஷ் நஷனல் கட்சி, கிரீன் கட்சி, பிரெக்ஸிட் கட்சி, பிளைட் சிம்ரு ஆகிய கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் பிரித்தானி பொதுத் தேர்தலில் போட்டியிட்டன.

எனினும் பிரதானமான கட்சிகளான பிரதமர் போரிஸ் ஜோன்சனின் கன்சர்வேடிவ், தொழிலாளர் கட்சி ஆகிய கட்சிகளிடையே நேரடி போட்டி நிலவியது.

இறுதிக்கட்ட பிரசாரத்தின்போது கருத்துக்கணிப்பில், போரிஸ் ஜோன்சனின் கன்சர்வேடிவ் கட்சிக்கு சற்று பின்னடைவு ஏற்பட்டிருப்பதாகவும், தொங்கு பாராளுமன்றம் அமையவே வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது.

ஆனால், ஆளும் கன்சர்வேடிவ் கட்சி பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவித்தன.

பிபிசி, ஐடிவி மற்றும் ஸ்கை நியூஸ் சேனலால் நடத்தப்பட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில், கன்சர்வேடிவ் கட்சி பெரும்பான்மையை காட்டிலும் 86 இடங்கள் கூடுதலாக வெற்றி பெறும் என்று தெரியவந்துள்ளது.

அதனை உறுதி செய்யும் வகையில் வாக்கு எண்ணிக்கையின் முடிவுகள் இருந்தன. பெரும்பான்மைக்கு மொத்தம் 326 இடங்கள் தேவை என்ற நிலையில் இன்று அதிகாலை நிலவரப்படி 92 தொகுதிகளில் பிரதமர் போரிஸ் ஜோன்சனின் கன்சர்வேடிவ் கட்சி பல்வேறு தொகுதிகளில் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறது. தொழிலாளர் கட்சி 77 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது.

கன்சர்வேடிவ் கட்சி தொழிலாளர் கட்சியின் கோட்டையாகக் கருதப்படும் பல்வேறு தொகுதிகளிலும் கன்சர்வேடிவ் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். குறிப்பாக வடக்கு இங்கிலாந்து, வேல்ஸ் பகுதிகளில் முக்கிய தொகுதிகளை தொழிலாளர் கட்சி இழந்தது.

ஸ்கொட்லாந்து தேசிய கட்சியானது, தொழிலாளர் கட்சி வசம் இருந்த ரூதர்கிளன், ஹாமில்டன் மேற்கு ஆகிய தொகுதிகளையும், கன்சர்வேடிவ் கட்சி வசம் இருந்த ஆங்கஸ் தொகுதிகளையும் கைப்பற்றியது.

டார்லிங்டன் உள்ளிட்ட சில தொகுதிகளில், கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறையாக கன்சர்வேடிவ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.  தொழிலாளர் கட்சியானது தென்மேற்கு லண்டனில் புட்னி தொகுதியை கன்சர்வேடிவ் கட்சியிடம் இருந்து கைப்பற்றியது.

கன்சர்வேடிவ் கட்சி வெற்றி பெற்றால் போரீஸ் ஜோன்சன் மீண்டும் பிரதமராவார். போரீஸ் ஜோன்சன் மீண்டும் பிரதமராகும் பட்சத்தில், பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றி கிறிஸ்துமஸ் தினத்திற்குள் பிரெக்ஸிட்டை நிகழ்த்த முனைவார் என எதிர்பார்க்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47