வவுனியா ஓமந்தை வேப்பங்குளம் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் நான்கு இராணுவத்தினர் உட்பட ஐவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

புளியங்குளம் பகுதியிலிருந்து வவுனியா திசை நோக்கிச் சென்ற இராணுவ வாகனம் ஒன்று  ஓமந்தை வேப்பங்குளம் பகுதியில் வைத்து மோட்டார் வாகனம் ஒன்றில் மோதியதிலேயே விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் நான்கு இராணுவத்தினரும், மோட்டார் வாகனத்தில் பயணித்த ஒருவரும் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையின் விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.