கொழும்பின் பல பகுதிகளில் 24 மணி நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி நாளை இரவு 8.00 மணி தொடக்கம் அடுத்த 24 மணி நேரம் வரையான ( 15 ஆம் திகதி இரவு 8 மணிவரை ) காலப் பகுதியில் இவ்வாறு நீர் விநியோகம் கொழும்பு 01, 10, 11, 12, 13, 14 மற்றும் 15 போன்ற பகுதியில் தடை செய்யப்படவுள்ளது.

இதேவேளை குறித்த காலப் பகுதியில் கொழும்பு 02 மற்றும் 09 பகுதிளில் குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகம் மேற்கொள்ளப்படும் எனவும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.