திருகோணமலை உட்துறைமுக வீதி கடற்கரையில் இன்று காலை வயோதிபரின் சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. 

இல. 208 உட்துறைமுக வீதியில் வசித்துவந்த வேலுப்பிள்ளை தர்மராஜா (வயது 76) என்பவருடைய சடலமே இவ்வாறு கரை ஒதுங்கியுள்ளதாக இனங்காணப்பட்டுள்ளது.

நேற்று புதன்கிழமை மாலை 5 மணியளவில் வீட்டில் இருந்து புறப்பட்ட இவர் இன்று வியாழக்கிழமை காலை திருகோணமலை உட் துறைமுக கடற்கரைக்கு அருகிலுள்ள சவுக்குத்தோட்ட பகுதியில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

மேலதிக விசாரணைகளை திருகோணமலை துறைமுக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.