பிரித்­தா­னியாவில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

பி.பி.சி, ஐ.டிவி மற்றும் ஸ்கை செய்தி ஊடகங்களினால் நடத்தப்பட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில், கன்சர்வேடிவ் கட்சி பெருன்பான்மையை காட்டிலும் 86 இடங்கள் கூடுதலாக வெற்றி பெறும் என்று தெரியவருகிறது.

பிரித்­தா­னியாவில் வாக்குச் சாவடிகளில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்புகளில், 2017 ஆம் ஆண்டு தேர்தலை காட்டிலும் அதிகமாக வெற்றி பெற்று கன்சர்வேடிவ் கட்சி 368 எம்பிக்களை பெறும் என்று கூறப்பட்டுள்ளது.

தொழிலாளர் கட்சி 191 இடங்களையும், தாராளவாத ஜனநாயகவாதிகள் கட்சி 13 இடங்களையும், ஸ்காடிஷ் நேஷனல் கட்சி 55 இடங்களையும், பிரெக்ஸிட் கட்சி இந்த எந்த வெற்றியும் பெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கன்சர்வேடிவ் கட்சி வெற்றி பெற்றால் அதன் மூலம் போரீஸ் ஜான்சன் மீண்டும் பிரதமராவார்.

பிரித்­தா­னியா ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தி­லி­ருந்து வில­கு­வ­தற்கான பிறிக்ஸிட் செயற்­கி­ரமம் தொடர் பில் தீர்­மா­னிக்கும் முக்­கி­யத்­துவம் மிக்க பொதுத் தேர்தல் நேற்று வியா­ழக்­கி­ழமை ஆரம்­ப­மா­னது. 

இது அந்­நாடு ஐந்து வருட காலத்­திலும் குறைந்த காலப் பகு­தியில் எதிர்­கொள்ளும் மூன்­றா­வது பொதுத் தேர்­த­லாகும். 2015 ஆம் ஆண்டு மற்றும் 2017 ஆம் ஆண்டு  தேர்­தல்­களைத் தொடர்ந்து இடம்­பெறும் இந்தத் தேர்தல் அந்­நாட்டில் சுமார் 100 வருட காலப் பகு­தியில் முதல் தட­வை­யாக டிசம்பர் மாதத்தில் நடத்­தப்­ப­டு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

இங்­கி­லாந்து, வேல்ஸ், ஸ்கொட்­லாந்து  மற்றும் வட அயர்­லாந்­தி­லுள்ள 650 தொகு­தி­களில் சர்­வ­தேச நேரப்­படி காலை 7.00 மணிக்கு ஆரம்­ப­மான வாக்­கெ­டுப்பு  இரவு 10.00 மணிக்கு நிறை­வு­பெற்­றது.

மேற்­படி தேர்­தலில் ஒவ்­வொரு தேர்தல் தொகு­தி­யி­லி­ருந்தும் மொத்தம் 650 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தெரி­வு­செய்­யப்­ப­ட­வுள்­ளனர். பிரித்­தா­னி­யாவில் தேர்­தல்­க­ளா­னது பாரம்­ப­ரி­ய­மாக  ஒவ்­வொரு நான்கு அல்­லது ஐந்து வரு­டங்­க­ளு­க்கு ஒரு தட­வையே நடத்­தப்­பட்டு வந்­தது. இந்­நி­லையில் கடந்த ஒக்­டோபர் மாதத்தில் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் குறு­கிய காலத்தில் தேர்­த­லொன்றை  நடத்­து­வ­தற்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்­தி­ருந்­தனர். 

பிரித்­தா­னி­யாவில் பிர­தான தேர்­த­லை­ய­டுத்து குறு­கிய காலத்தேர்­தலொன்று நடை­பெ­று­வது  கடந்த பல வருட காலப் பகு­தியில் இதுவே முதல் தட­வை­யாகும். 

அத்­துடன் இந்தத் தேர்தல் 1974 ஆம் ஆண்­டுக்குப் பின்னர் குளிர் காலத்தில் இடம்­பெறும் முத­லா­வது தேர்­த­லா­கவும் 1923 ஆம் ஆண்டிற்குப் பின்னர்  டிசம்பர் மாதத்­தில் இடம்­பெறும் முத­லாவது தேர்­த­லா­கவும் உள்­ளது.

பிரித்­தா­னியா ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தி­லி­ருந்து வில­கு­வ­தற்­கான கடந்த ஒக்­டோபர் 31 ஆம் திகதி காலக்­கெ­டு­விற்குள் அது தொடர்பில் நட­வடிக்கை எடுக்கத் தவ­றி­ய­தை­ய­டுத்து அர­சியல் ஸ்தம்­பித நிலையை முடி­வுக்கு கொண்டு வரும் முக­மாக  டிசம்பர் 12 ஆம் திகதி தேர்­தலை நடத்­து­வ­தற்கு பிர­தமர் போரிஸ் ஜோன்ஸன் அழைப்பு விடுத்­திருந்தார். 

அவர்  ஏற்­க­னவே  பிரித்­தா­னியா ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தி­லி­ருந்து பிரிவது தொடர்­பான பிறிக்ஸிட் உடன்­ப­டிக்கை குறித்து நடத்­தப்­பட்ட சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­புக்கு அமைய பிறிக்ஸிட் செயற்­கி­ர­மத்தை முன்னெ­டுக்க எதிர்­பார்த்­துள்ளார். 

ஆனால்  தொழிற் கட்சித் தலைவர் ஜெரேமி கொர்­பைனோ பிறிக்ஸிட் குறித்து புதிய  சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பை நடத்த வலி­யு­றுத்தி வரு­கிறார்.  இந்தத் தேர்­தலில் பிரித்­தா­னிய அல்­லது பொது­ந­ல­வாய அல்­லது வட அயர்­லாந்தைச் சேர்ந்த வாக்­க­ளிக்க தம்மைப் பதி­வு­செய்து கொண்ட 18 வய­துக்கு அல்­லது அதற்கு மேற்­பட்ட வய­து­டைய  பிரஜைகள் அனை­வரும்  வாக்­க­ளிக்கத் தகுதி பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.