ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் மொடேகி டொசிமிட்சு நேற்று இரவு உத்தியோகபூர்வாமாக விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்தடைந்தார்.

அவருடன் 21 பேர் கொண்ட தூதுக் குழுவும் இலங்கை வந்துள்ளது.

நாளை வரை நாட்டில் தங்கி இருக்கும் அவர், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.