மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 14 வயது சிறுமி ஒருவருக்கு அதிக மருந்தை வழங்கியதால் சிறுமி உயிரிழந்த சம்வம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பெண்தாதியர். மருந்தாளர் மற்றும் நீதிமன்றில் தெரிவான வைத்தியர் உட்பட மூவரையும் தலா ஒருவருக்கு 5 இலட்சம் ரூபா கொண்ட இரண்டு பேர் கொண்ட சரீரப்பிணையில் எச்சரிக்கையுடன் விடுவித்துள்ளார்.
குறித்த வைத்தியசாலையில் புற்று நோய் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த காங்கேயனோடை பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயதுடைய உவைஸ் பாத்திமா ஜப்றா என்ற சிறுமிக்கு அதிக மருந்தை வழங்கியதால் கடந்த திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார்
உயிரிழந்த சிறுமியின் பெற்றோர் மட்டக்களப்பு தலைமையத்தில் முறைப்பாடு செய்தததையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு பொலிசாருக்கு நீதவான் உத்தரவிட்டார்
இந்த நிலையில் குறித்த சந்தேக நபர்களான 2ம் ,3ம் எதிரிகளான பெண் தாதியர் ,மருந்தாளர், ஆகிய இருவரையும் பொலிசார் இன்று வியாழக்கிழமை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தியதுடன் சந்தேக நபரான வைத்தியர் சட்டத்தரணி ஊடாக நீதிமன்றில் தெரிவானார். இதனையடுத்து இந்த வழக்கை நீதவான் சிலமணிநேரம் ஒத்திவைத்தார்.
பின்னர் பிற்பகல் மீண்டும் வழக்கை எடுக்கப்பட்டபோது இவர்களை பிணையில் விடுவிக்குமாறு சந்தேகநபர்களின் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளான விஜயகுமார் , மரியசுலோசன் ஆகியோர் நீதிமன்றில் கேட்டுக் கொண்ட நிலையில் நீதவான் இந்த வைத்தியசாலையில் 9 வயது சிறுவன் இரத்தம் மாற்றி ஏற்றி உயிரிழந்த சம்பவம். மற்றும் . சிசு உயிரிழந்த சம்பவம் இவ்வாறான சம்பவங்கள்; தொடச்சியாக அண்மையில் இடம் பெற்று வருவதை சுட்டிக்காட்டினார்.
அத்துடன் அந்த கால பகுதியில் இன்னும் ஒரு சிசு உயிரிந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும். ஊடகங்கள் முந்திக் கொண்டதால் இவ்வாறான சம்பவங்கள் வெளி வந்துள்ளது என நீதவான் சுட்டிக்காட்டி மீண்டும் வழக்கை ஒத்திவைத்தார்
மீண்டும் மாலை 5.30 மணிக்கு வழக்கு எடுக்கப்பட்டு இவ்வாறான சம்பவம் இனி வைத்தியசாலையில் இடம்பெறக் கூடாது என சுட்டிக்காட்டி பல எச்சரிக்கையின் மத்தியில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு சந்தேக நபர்கள் இழப்பீடு வழங்குவதாக ஏற்றுக் கொண்டதையடுத்து 3 வரையும் எதிர்வரும் ஜனவரி 9 ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு தலா ஒருவருக்கு 5 இலட்சம் ரூபா கொண்ட இரண்டு பேர் கொண்ட சரீரப்பிணையில் விடுவித்துள்ளார்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM