(செ.தேன்மொழி)

நாட்டையும் அரசாங்கத்தையும் அசௌகரித்திற்குள் தள்ளவே சுவிஸ் தூதரக ஊழியர் கடத்தல் விவிகாரம் என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த  கூடிய விரைவில் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் எனவும் குறிப்பிட்டார். 

களுத்துறை பகுதியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு பதிலளிக்கையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த மேற்கண்டவாறு தெரிவித்தார். 

ஐக்கிய தேசிய கட்சி சூழ்ச்சிகார தலைவர்களின் நிர்வாண நிலைமை தற்போது வெளிப்பட தொடங்கியுள்ளது. சுவிஸ் தூதரக ஊழியர் வழங்கிய வாக்குமூலத்திலற்ற முற்றிலும் மாறுப்பட்ட கருத்தினையே தற்போது கூறி வருகின்றார். அதே போன்று பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன சுவிஸ்தூதரக ஊழியர் கடத்தல் விவகாரம் குறித்து ஒரு கருத்தினை தெரிவித்திருக்கையில் தூதரகம் மாறுப்பட்ட கருத்தினை தெரிவித்துள்ளது. 

தற்போதைய அரசாங்கத்தையும் நாட்டையும் அசௌகரியத்திற்குள் தள்ளவே இவை அனைத்தினதும் நோக்கமாக காணப்படுகின்றன. எனவே கூடிய விரைவில் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.