இராணுவம் பொதுமக்களை சுற்றிவளைத்து படுகொலை செய்வது இனப்படுகொலையில்லையா? ஆங் சான் சூகி கருத்து குறித்து ரொகிங்யா மக்கள் சீற்றம்

Published By: Rajeeban

12 Dec, 2019 | 04:06 PM
image

மியன்மார் படையினர் இனப்படுகொலையில் ஈடுபடவில்லை என ஆங் சான் சூகி  தெரிவித்துள்ளமை குறித்து கடும் கண்டனம் வெளியிட்டுள்ள ரொகிங்யா இனத்தவர்கள் அவர் தெரிவித்தது உண்மையா என்பதை உலக  உரிய ஆதாரங்களுடன் மதிப்பிடும் என குறிப்பிட்டுள்ளனர்.

இனப்படுகொலை இடம்பெறவில்லை என அவர்  தெரிவித்துள்ளதை உரிய ஆதாரங்களுடன் உலகம் மதிப்பிடும் என சமாதானம் மனிதஉரிமைகளிற்கான ரொகிங்யா அமைப்பின் தலைவர் முகமட் மொகிபுல்லா தெரிவித்துள்ளார்.

திருடன் ஒருவன் தான் திருடன் என்பதை ஒருபோதும்ஏற்றுக்கொள்வதில்லை, ஆனால்  ஆதாரங்கள் மூலம் நீதியை வழங்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

உலகம் எங்களிடமிருந்து இனப்படுகொலைக்கான ஆதாரங்களை பெற்றுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆங் சான் சூகி  பொய்சொன்னாலும் அவர் தப்ப முடியாது அவர் நிச்சயம் நீதியை எதிர்கொள்வார் உலகம் அவரிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பங்களாதேசின்  குட்டுபலங் அகதிமுகாமில் உள்ள மற்றொருஅகதியான நுர் கமால்   என்பவரும்; ஆங் சான் சூகியின்   வாக்குமூலத்தை நிராகரித்துள்ளார்.

இராணுவம் மக்களை சுற்றிவளைத்து துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு கொலை செய்த பின்னர்அவர்களின்உடலிற்கு தீ மூட்டுவது  இனப்படுகொலை இல்லையா என அவர் கேள்விஎழுப்பியுள்ளார்.

ஆங் சான் சூகி  அவ்வாறு சொன்னால்அது சரியாகிவிடுமா எனவும் கேள்விஎழுப்பியுள்ள அவர் உலகம் இதனை ஏற்றுக்கொள்ளாது,எங்கள் மீதான சித்திரவதைகளை முழு உலகமும் பார்த்துள்ளது, எனவும் அவர்தெரிவித்துள்ளார்.

மியன்மாரிற்கு எதிரான இனப்படுகொலை குற்றச்சாட்டு தவறாக வழிநடத்தும் நோக்கத்தை கொண்டது முழுமையற்றது என ஆங் சான் சூகி  தெரிவித்துள்ளார்.

ஹேக் சர்வதேச நீதிமன்றில் மியன்மாரிற்கு எதிரான யுத்த குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ரொகிங்யா மக்களிற்கு எதிராக அளவுக்கதிகமான படைபலம் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ள அவர் எனினும் மியன்மாரின் மேற்கு ரக்கைன் மாநிலத்தில் இடம்பெறும் மோதல் குழப்பமானது இலகுவில் புரிந்துகொள்ள முடியாதது என தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47