பிரிட்டனின் அதிகாரமிக்க அடுத்த பிரதமரை தெரிவு செய்வதற்கான பாராளுமன்ற தேர்தல் இன்று விறுவிறுப்பாக இடம்பெற்ற வேளை வாக்களிப்பு நிலையத்திற்கு சென்ற பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் நாயுடன் சென்று  வாக்களித்துள்ளார்.

ப்ரெண்ட்ஸ் அப் அனிமல்ஸ் வேல்ஸ் என்ற தொண்டு நிறுவனத்திலிருந்து ஜாக் ரஸ்ஸல் குறுக்கு இனம் நாயை போரிஸ் ஜோன்சன் மற்றும் அவரது நண்பர்  கேரி சைமண்ட்ஸ் தத்தெடுத்துள்ளனர்.

இந்த நாயுடன் சென்றே  போரிஸ் ஜோன்சன் வாக்களித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.