மலை­யகம் என்ற சமூ­கத்தை பிர­தி­நி­தித்­துவப்படுத்தும் வகையில் உரு­வாக்­கப்­ப­ட­வுள்ள மலை­யக பல்­க­லைக்­க­ழ­கத்­திற்கு பலர் மத்­தியில் எதிர்ப்­புக்கள் தெரி­விக்­கப்­பட்டு வரு­கின்ற போதிலும், அதனை உரு­வாக்­கு­வதே மலை­யக மக்கள் மற்றும் மலை­யக அமைப்­பு­களின் பெரும் எதிர்­பார்ப்பாகும். அதனை நிறை­வேற்றும் வகை­யி­லான முதல் அடித்­தளம் தற்­போது போடப்­பட்­டுள்­ளது.

இலங்கை தொழி­லாளர் காங்­கி­ர­சினால் முன்­வைக்­கப்­பட்ட 32 கோரிக்­கைகளுள் ஒரு அம்­ச­மான இந்த பல்­க­லைக்­க­ழகம் உரு­வாக்­கு­வது தொடர்பில் ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­ப­க் ஷவும் இணக்கம் தெரி­வித்­துள்ளார். இதனை செயற்­ப­டுத்தும் எண்­ணத்தில் அமைச்சர் ஆறு­முகன் தொண்­ட­மானின் பரிந்­து­ரையின் பேரில்  முன்னாள் அமைச்சர் பி.பி .தேவ­ராஜின் தலை­மையில் உப­குழு அமைக்­கப்­பட்டு அதற்­கான செயற்­றிட்­டங்கள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன. இந்­நி­லையில் இந்த விடயம் தொடர்­பான முதல் கலந்­து­ரை­யாடல் கொழும்பு தமிழ் சங்­கத்தில் இடம்­பெற்­றது.இதன்­போது மலை­யக கல்­வி­மான்கள், பேரா­சி­ரி­யர்கள், அர­சியல் வாதிகள் , தொழி­ல­தி­பர்கள், நலன்­வி­ரும்­பிகள் உள்­ளிட்ட பலரும் கலந்துக் கொண்­டி­ருந்­த­துடன் , மலை­ய­கத்­துக்­கான பல்­க­லைக்­க­ழகம் தொடர்பில் மூன்று சுற்­று­களில் கலந்­து­ரை­யா­டப்­பட்­டன. சிறப்­பான முறையில் இடம்­பெற்­றி­ருந்த இந்த கலந்­து­ரை­யா­டலில் ஏன் மலை­ய­கத்­துக்­கென்று பல்­க­லைக்­க­ழகம் உரு­வாக்­கப்­பட வேண்டும். அதன் அமைப்பு எவ்­வாறு இருக்க வேண்டும் என்­பது தொடர்பில் கல்­வி­மான்­களால் கருத்­துக்கள் முன்­வைக்­கப்­பட்­ட­துடன், திறந்த சுற்றில் பல்­க­லைக்­க­ழ­கத்­திற்­கான அவ­சியம் தொடர்பில் சபை­யி­லி­ருந்த பலரும் தமது கருத்­துக்­களை முன்­வைத்­தனர்.

முன்னாள் அமைச்சர் பி.பி.தேவராஜ் 

இதன் போது வர­வேற்­பு­ரையை நிகழ்த்­திய முன்னாள் அமைச்சர் பி.பி.தேவராஜ் கூறி­ய­தா­வது,

மலை­ய­கத்­துக்­கான பல்­க­லைக்­க­ழகம் அமைப்­பது தொடர்பில்    ஜனா­தி­பதி கோத்தபாய ராஜ­ப­க் ஷ சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். அதே­வேளை அமைச்சர் ஆறுமுகன் தொண்­ட­மானும் எமக்கு அழைப்பு விடுத்­துள்ளார். இந்­நி­லையில் மலை­ய­கத்­துக்­கான பல்­க­லைக்­க­ழ­கத்தை அமைப்­ப­தற்­கா­ன வழி­பி­றந்­துள்­ளது. அதனை நாம் நன்கு பயன்­ப­டுத்திக் கொள்ள வேண்டும். கட்­சி­பேதம் இன்றி நாம் ஒன்­றி­ணைந்து செயற்­பட்­டாலே இதில் வெற்­றி காண முடியும். 

அமைச்சர் ஆறு­முகன் தொண்­டமான் என்னை அழைத்து இந்த விடயம் தொடர்பில் உங்­களால் ஆராய்ந்து பார்க்க முடி­யுமா என்று கேட்­ட­போது   நான் மிக மகிழ்ச்­சி­யுடன் அதனை ஏற்றுக் கொண்டேன். அதற்­க­மைய இந்த விடயம் தொடர்பில் முதற்­கட்ட கலந்­து­ரை­யாடல் ஒன்றை  மேற்­கொள்ள நாம் தீர்­மா­னித்தோம். இந்த கலந்­து­ரை­யா­டலை கல்வி அமைச்சில் மேற்­கொள்­வது உசி­த­மா­னது அல்ல என்­ப­தினால், தமிழ்­சங்கம் போன்ற ஒரு மண்­ட­பத்தில் மேற்­கொள்­வது சிறந்­தது என்று கரு­தியே இதனை இங்கு ஒழுங்கு செய்­துள்ளோம்.

மலை­யக சமூ­கத்தைச் சேர்ந்த சிறந்த கல்­வி­மான்கள் இருக்­கின்­றனர். இவர்­க­ளுடன் கலந்­து­ரை­யாடி இதற்­கான முடி­வு­களை எடுப்­பது சிறந்­தது என்று நான் கரு­து­கின்றேன். பிரித்­தா­னி­யரின் ஆட்சிக் காலங்­களின் போது, 1902 ஆம் ஆண்டு பிரித்­தா­னிய பாரா­ளு­மன்­றத்தில் பெருந்­தோட்ட பிள்­ளை­க­ளுக்கு ஏன் கல்வி கற்­பிக்­கப்­ப­டு­வ­தில்லை என்று கேள்வி எழுப்­பப்­பட்ட போது, தோட்ட நிர்­வாக சங்­கத்­த­லை­வர்கள் 'கல்வி கற்­பிக்­க­ப­்பட­வில்லை என்று அப்­ப­டி­யொரு பாதிப்பும் ஏற்­ப­ட­ப்போ­வ­தில்லை, மாறாக கற்­பிக்­கப்­பட்டால் வீண்­வி­ப­ரீ­தங்­களே ஏற்­படும்' என்றும் தெரி­வித்­தி­ருந்­தனர். 

இவ்­வாறு கல்­வியில் புறக்­க­ணிக்­கப்­பட்டு வந்த எமக்கு சுதந்­தி­ரத்தின் பின்­ன­ரான, 1977 ஆம் ஆண்டின் பின்­னரே அதில் மாற்றம் ஏற்­படத் தொடங்­கின. இந்­நி­லையில் நாம் தற்­போது கல்­வியில் உயர் நிலையை  நோக்கி நகர்ந்து வந்து கொண்­டி­ருக்­கின்றோம். இவ்­வா­றான சூழ்­நி­லை­யிலே மலை­ய­கத்­துக்­கென்று பல்­க­லைக்­க­ழகம் உரு­வாக்­கப்­ப­டு­வது உசி­த­மா­னது என நான் எண்­ணு­கின்றேன்.

பேரா­சி­ரியர் சோ.சந்­தி­ர­சே­கரம்

இதன்­போது 'மலை­யக பல்­க­லைக்­க­ழ­கத்தின் அவ­சியம்' தொடர்பில் கருத்து முன்­வைத்த கொழும்பு பல்­க­லைக்­க­ழ­கத்தின் முன்னாள் விரி­வு­ரை­யா­ளரும்   தேசிய மொழி ஆணைக்­கு­ழுவின் தலை­வ­ரு­மான பேரா­சி­ரியர் சோ.சந்­தி­ர­சே­கரம் கூறு­கையில், 

மலை­யக பல்­க­லைக்­க­ழகம் தொடர்பில் கடந்த 12 வரு­ட­கா­ல­மாக நானும்   பேரா­சி­ரியர் மூக்­கையா மற்றும் பேரா­சி­ரியர் தனராஜ் உள்­ளிட்ட பலரும் எழு­தி­வந்து கொண்­டி­ருக்­கின்றோம்.இந்த விடயம் தொடர்பில் காலஞ்­சென்ற முன்னாள் அமைச்சர் சௌமி­ய­மூர்த்தி தொண்­ட­மா­னிடம் நாங்கள் தெரி­வித்த போது அவ­ரது வேண்­டு­கோ­ளுக்­கி­ணங்க அறிக்­கை­யொன்­றையும் தயா­ரித்துக் கொடுத்­தி­ருந்தோம். துர­திஷ்டவச­மாக அவர் உயி­ரி­ழந்­து­விட்டார். பின்னர் பல தட­வைகள் குழு அமைத்தும் இந்த பல்­க­லைக்­க­ழகம் தொடர்பில் பேச்­சு­வார்த்­தை­களை நடத்­தினோம். அதனால் இந்த விடயம் எங்­க­ளுக்கு மிகவும் பரிச்­ச­ய­மா­ன­தாகும்.

1942 ஆம் ஆண்டே இலங்­கைக்­கான முதல் பல்­க­லைக்­க­ழகம் உரு­வாக்­கப்­பட்­டது. ஆனால் இதற்­கான யோச­னைகள் 1990 ஆம் ஆண்டே ஆரம்­பிக்­கப்­பட்­டு­விட்­டன. ஆங்­கி­லேயர் காலத்­திலே இலங்­கையில் பல்­க­லைக்­க­ழ­க­மொன்றை அமைக்க தீர்­மானித்­த­போது எவ்­வா­றான தடங்­கல்கள் ஏற்­பட்­டனவோ அதே­போ­லத்தான் இப்­போது மலை­யகப் பல்­க­லைக்­க­ழ­கத்­திற்கும் எதிர்­ப்புகள் தோற்றம் பெற்று வரு­கின்­றன.

இந்­திய வம்­சா­வளி மக்கள் திட்­ட­வட்­ட­மாக வாழ்ந்து வரு­கின்­ற­வர்கள். சுமார் 15 இலட்சம் மக்­களை கொண்­டுள்ள மலை­ய­கத்தின் அடை­யா­ளத்தை பிர­தி­ப­லிக்க ஒரு தேசிய பல்­க­லைக்­க­ழகம் அமைக்­கப்­பட வேண்டும்.இது­வரை காலமும் தனக்­கென்ற பல்­க­லைக்­க­ழகம் தொடர்பில் சிந்­திக்­காத மக்கள் 20ஆம் நூற்­றாண்டின் பிற்­ப­கு­தியில் சிந்­திக்க ஆரம்­பித்­துள்­ளார்கள் என்றால்  அவர்கள் வளர்ச்­சி­ய­டைந்து விட்­டார்கள் என்­ப­தையே உணர்த்­து­கின்­றது.

நாங்கள் ஒரு இனத்­திற்கு முன்­னு­ரிமை வழங்­கு­வ­தற்­காக இந்த யோச­னையை முன்­வைக்­க­வில்லை. மலை­யக மக்­களின் அடை­யா­ளத்தை பிர­தி­ப­லிப்­ப­தற்­கா­கவே இவ்­வாறு எமக்­கென்று ஒரு பல்­க­லைக்­க­ழ­கத்தை அமைத்­து­த­ரு­மாறு கேட்­கின்றோம். ஒவ்­வொரு பகு­தி­யிலும் அவர்­களின் அடை­யா­ளத்தை பிர­தி­ப­லிக்கும் வகையில் பல்­கலைக்­க­ழ­கங்கள் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளன. வவு­னி­யா­விலும் பல்­க­லைக்­க­ழ­க­மொன்றை அமைக்க தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. இந்­நி­லையில் எம்­மக்­களின் வர­லாறு கலா­சார பண்­புகள் ஆரா­யப்­பட வேண்டும் அல்­லவா. அவர்­களின் அடை­யா­ளத்­தையும் மேம்­ப­டுத்த வேண்டும் அல்­லவா. ஏனைய பல்­க­லைக்­க­ழ­கங்­களில் எமது பண்­புகள் தொடர்பில் கற்­கை­நெ­றி­களை மேற்­கொள்ள முடி­யாது.

ஜனா­தி­பதி நினைத்தால் ஒரு நிமி­டத்தில் பல்­க­லைக்­க­ழ­கத்தை அமைக்க முடியும். ஆனால் நடை­முறை சாத்­தி­ய­மற்ற விட­யங்­களே மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. பல்­க­லைக்­க­ழகம் அமைப்­பது தொடர்பில் குழுக்கள் அமைத்து ஆராய்ந்து இறு­தியில் அது தேவை­யில்லை என்ற நிலைமை ஏற்­ப­டவும் வாய்­ப்பி­ருக்­கின்­றது.

இறு­தி­யாக எம் நாட்டில் 2005 ஆம் ஆண்டே பல்­க­லைக்­க­ழகம் உரு­வாக்­கப்­பட்­டது. இந்­நி­லையில் இந்த 14 வருட கால­மாக இன்னும் ஒரு பல்­க­லைக்­க­ழகம் கூட உரு­வாக்­கப்­ப­ட­வில்லை. எமது வேண்­டுகோள் என்­ன­வென்றால் அடுத்த பல்­க­லைக்­க­ழ­கத்தை நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் அமை­யுங்கள் என்­பதே. ஆராய்ச்­சி­களின் ஊடா­கவே சமூ­கத்தில் மேம்­பாட்டை ஏற்­ப­டுத்த முடியும். நாமும் எமது சமூ­கத்தில் மேம்­பாட்டை ஏற்­ப­டுத்­து­வ­தென்றால் ஆய்­வு­களை மேற்­கொள்ள வேண்டும். அதற்­கா­கவே எமக்­கென்று ஒரு பல்­க­லைக்­க­ழகம் தேவைப்­ப­டு­கின்­றது.

பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளிலே கற்­பித்தல் மற்றும் ஆராய்ச்­சி­களே மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. எமது சமூகம் தொடர்­பிலும் நாம் ஆராய்ச்­சி­களை மேற்­கொள்ள வேண்டும் அல்­லவா. அதே­வேளை இவ்­வாறு பல்­க­லைக்­க­ழகம் உரு­வாக்­கப்­பட்டால் உயர்­கல்­விக்­கான கேள்­வியும் எமது சமூ­கத்தில் அதி­க­ரிக்கும்.  அப்­போது அனை­வரும் உயர்­கல்­வியை பெறு­வ­தற்­கான சந்­தர்ப்பம் ஏற்­படும்.எந்த பல்­க­லைக்­க­ழ­கத்­திலும் பட்­டப்­ப­டிப்பை மேற்­கொள்­ளலாம். ஆனால் மலை­ய­க­மக்­களை அடை­யா­ளப்­ப­டுத்தும் வகை­யி­லான கற்­கை­நெ­றி­களை முன்­னெ­டுக்­கவே இந்த மலை­யத்­திற்கு ஒரு பல்­க­லைக்­க­ழகம் உரு­வாக்­கப்­பட வேண்டும்.                                                                                                                                       

 பேரா­சி­ரியர் எம்.எஸ்.மூக்­கையா 

'பல்­க­லைக்­க­ழ­கத்தின் வர­லாறு , கடமை, நோக்­கங்கள் ' என்­பது தொடர்பில் கருத்து தெரி­வித்த பேரா­தனை பல்­க­லைக்­க­ழ­கத்தின் முன்னாள் சிரேஷ்ட விரி­வு­ரை­யா­ளரும்  கிழக்கு பல்­க­லைக்­க­ழ­கத்தின் முன்னாள் உப­வேந்­த­ரு­மான பேரா­சி­ரியர் எம்.எஸ்.மூக்­கையா கூறி­ய­தா­வது,  

பல்­க­லைக்­க­ழகம் என்றால் பாட­சாலை கல்­வியை முழு­மை­யாக முடித்த மாண­வர்­க­ளுக்­கான உயர் கல்­வியை வழங்கி அதற்­கான ஒரு அங்­கீகா­ரத்தை வழங்கும் வகையில் பட்­ட­மொன்றை வழங்கும் இடம் என்­றுதான் நாம் நினைத்துக் கொண்­டி­ருக்­கின்றோம்.இவை காலத்­திற்கு காலம் அவற்றின் நடை­மு­றைகள், இயக்­கங்கள் என்­பனவற்றைப் பொறுத்து வளர்ச்­சி­ய­டைந்து வரு­கின்­றன. 'யுனிவ­ர்சிட்டி' என்­பது ஐரோப்­பிய ஜேர்­ம­னிய சிந்­தனை. தலை­மைத்­து­வ­த்­திற்­கான பயிற்­சி­களை மாத்­திரம் வழங்கும் இட­மாகவே இவை காணப்­பட்­டன. இதன்­போது தன­வந்­தர்கள் மற்றும் உயர்­மட்­டத்தில் உள்­ள­வர்­களின் பிள்­ளைகள் மாத்­தி­ரமே இதன் மூலம் கல்வி கற்று வந்­தனர். ஆனால் இங்கு ஏற்­பட்ட புரட்­சி­களின் பின்னர் ஏனைய சமூ­கத்­தி­னரும் கற்­ப­தற்­கான வச­திகள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டன.

வளர்­ச்சி­ய­டைந்த நாடு­களில் பல்­க­லைக்­க­ழகம் என்­பது தனி­யான சமூ­கத்­தி­ன­ருக்கு என்று வேறு­ப­டுத்­த­ப்ப­டாமல் , அனைத்து சமூ­கத்­தி­ன­ரையும் இணைத்துக் கொண்டு செயற்­படும் உயர்­மட்­டத்­தி­லான கல்வி நிறு­வ­னங்­க­ளா­கவே காணப்­ப­டு­கின்­றன. இந்­நாட்டை பொறுத்­த­மட்டில் ஒரு இலட்­சத்து 25 ஆயிரம் மாண­வர்கள் உயர்­த­ரத்தில் தோற்றி சித்­தி­ய­டைந்­தி­ருந்­தாலும் கூட இதில் 30 ஆயிரம் பேருக்கு மாத்­தி­ரமே பல்­க­லைக்­க­ழ­கத்­திற்­கான அனு­மதி கிடைக்­கின்­றது.ஏனைய 90 ஆயிரம் பேரில் வச­தி­ப­டைத்த பகு­தி­யி­னரைச் சேர்ந்த சுமார் 10 ஆயிரம் மாண­வர்கள் வெளி­நா­டு­களில் சென்று பட்­ட­ப­்படிப்பை முடித்­தாலும் , மீத­முள்ள 80 ஆயிரம் மாண­வர்கள் விரக்­தி­யி­லேயே வாழ்ந்து வரு­கின்­றனர். இவ்­வா­றான நிலை­யிலே 15 பல்­க­லைக்­க­ழ­கங்­களை வைத்­துக்­கொண்டு எம்மால் எந்த மாற்­றத்தை ஏற்­ப­டுத்­த­மு­டியும்.

பல்­க­லைக்­க­ழ­கங்­களை வேலை­யற்ற பட்­ட­தா­ரி­களை உரு­வாக்கி நாட்­டிற்கு பெரும் சுமையை ஏற்­ப­டுத்தும் நிறு­வ­னங்­க­ளாக பார்ப்­பதை நிறுத்திக் கொள்­ள­வேண்டும்.பல்­க­லைக்­க­ழ­கத்­திற்­கான அனு­ம­தியை பெறு­ப­வர்­களின் தொகை­யிலும் தற்­போது அதி­க­ரிப்பு ஏற்­பட்டு வரு­கின்­றது. இந்­நி­லையில் உயர்­கல்­வியை பெறு­ப­வர்­களே அவர்­களின் வாழ்க்­கைத்­த­ரத்­தையும் உயர்த்திக் கொள்­ள­வேண்டும். தகுதி வாய்ந்­த­வர்கள் மட்­டும்தான் பல்­க­லைக்­க­ழ­கத்தில் கல்­வி கற்க மு­டியும் என்ற நிலை­மையை மாற்றி சாதா­ரண எழு­த­ப்ப­டிக்க தெரிந்­த­வர்கள் கூட பயிற்­சி­களை பெற்று சான்­றி­தழ்­களை பெற்றுக் கொள்ளக் கூடிய நிலை­மை­களை நாங்கள் ஏற்­ப­டுத்திக் கொடுத்­துள்­ளளோம்.

பேரா­சி­ரியர் தனராஜ் 

இதன்­போது 'பல்­க­லைக்­க­ழ­கத்தின் செயன்­முறை பாடத்­திட்­டங்கள்' என்ற தலைப்பில் உரை­யாற்­றிய இலங்கை திறந்த பல்­க­லைக்­க­ழ­கத்தின் சிரேஷ்ட விரி­வு­ரை­யாளர் பேரா­சி­ரியர் தனராஜ் கூறி­ய­தா­வது, 

நாம் முதலில் மலை­யகப் பல்­க­லைக் ­க­ழகம் என்று கூறு­வதை நிறுத்திக் கொள்ள வேண்டும். மலை­யகம் என்­பது தனி­யான ஒரு சமூ­கத்தை பிர­தி­ப­லிப்­ப­தாகும். இது தனி­யான ஒரு சமூ­கத்­துக்கு முன்­னு­ரிமை கொடுப்­ப­தாக பல­ராலும் அவ­தா­னிக்­க­ப்படுகின்­றது. இந்த விடயம் தொடர்பில் நாங்கள் பேச்­சு­வார்த்தை நடத்­திய போதும் ஒரு சமூ­கத்துக்­கென்று ஏன் பல்­க­லைக்­க­ழகம் அமைக்­கப்­பட வேண்டும் என்ற கேள்வி எழுப்­பப்­பட்­டது. இலங்­கை­யி­லுள்ள அனைத்து பல்­க­லைக்­க­ழ­கங்­களும் தமது கலா­சார அம்­சங்­களை பிரதிபடுத்­தி­னாலும், அவை­ அ­னைத்தும் தேசிய பல்­கலைக்­க­ழ­கங்­க­ளா­கவே திகழ்­கின்­றன. இந்­நி­லையில் எல்லா பிர­தே­சங்­க­ளையும் சேர்ந்த மாண­வர்கள் அங்கு கல்­வி­ கற்று வரு­கின்­றனர்.

எம்மை பொறுத்­த­வ­ரையில் அடுத்து உரு­வா­கவி­ருக்கும் பல்­க­லைக்­க­ழ­கத்தை மலை­நாட்டில் அமைப்­பதே சிறந்­தது. இந்­நி­லையில் 16 ஆவது பல்­க­லைக்­க­ழ­கத்தை ஹட்டன், கொட்­ட­கலை அல்­லது தல­வாக்­க­லையில் அமைப்­பது சாலச்­சி­றந்­தது எனக் ­க­ரு­து­கின்றேன். அப்­போது பல்­க­லைக் ­க­ழ­கத்­துக்கு எதி­ரான தவறான அபிப்பி­ரா­யங்­களை தவிர்த்துக் கொள்­ளலாம்.

பல்­க­லைக்­க­ழ­கத்தின் பழ­மை­யான கற்கை நெறி­க­ளாக சான்­றிதழ், டிப்ளோமா, பட்­ட­தாரி, முது­கலை என்­ப­னவே அமை­யப் ­பெற்­றுள்­ளன. நாம் தொடர்ந்தும் இந்த கற்கை நெறிகள் தொடர்­பிலே ஆரா­யாமல், வெளி­ப்புறத் திட்­டங்­களை ஆரம்­பிப்­பதே சிறந்­தது. இத­னூ­டாக நாம் முன்­னேற்­ற­க­ர­மான வளர்ச்­சியை அடை­ய­மு­டியும். மாற்றம் என்­பது மனித குலத்துக்கு புதி­ய­ வி­ட­ய­மல்ல. நாம் தற்­போது எமக்­கென்று ஒரு பல்­க­லைக்­க­ழ­கத்தை உரு­வாக்க முன்­வந்­துள்ளோம். இது சாத்­தி­யப்­ப­டு­மானால் அது எமக்கு பெரும் மகிழ்ச்­சியே.

இலங்­கையில் விரி­வு­ரை­யா­ளர்கள் 5000 பேர் இருக்­கின்­றார்கள். அவர்­களுள் 21 விரி­வு­ரை­யா­ளர்­களே மலை­ய­கத்தைச் சேர்ந்­த­வர்­க­ளாக காணப்­ப­டு­கின்­றார்கள். 500 பேரா­சி­ரி­யர்­களில் 5 பேரே மலை­ய­கத்தைச் சேர்ந்­த­வர்கள். அவர்­களும் தற்­போது ஓய்­வு­பெற்­று ­விட்­டார்கள். இந்­நி­லையில் தற்­போது விஜ­ய­சந்­தி­ர­னுக்கு அந்த வாய்ப்பு கிட்­டி­யுள்­ளது. இவ்­வா­றான நிலை­யிலே நாம் ஏனைய சமூ­கத்­தை­விட பின்­ன­டை­வில் இருக்­கின்றோம். இதனால் எமக்கு பல்­க­லைக்­க­ழ­கம் தேவை­யில்லை என்­ப­தில்லை. நாம் இந்த நிலை­யி­லி­ருந்து மாற்­ற­மடைய வேண்­டு­மென்றால் அதற்­கான புதிய ஏற்­பா­டு­களை முன்­னெ­டுக்க­ வேண்டும்.

கலா­நிதி ஏ.எஸ்.சந்­தி­ரபோஸ்

'பல்­க­லைக்­க­ழகம் அமைப்­ப­தற்கு தேவை­யான நட­வ­டிக்­கைகள்' என்ற தலைப்பில் உரை­யாற்­றிய விரி­வு­ரை­யாளர் கலா­நிதி ஏ.எஸ்.சந்­தி­ரபோஸ்,

பல்­க­லைக்­க­ழ­கத்தை உரு­வாக்­கு­வது தொடர்பில் 4 விட­யங்­களை முன்­வைக்க விரும்­பு­கிறேன். முத­லா­வ­தாக எண்­ணக்­கரு அறிக்­கை­யொன்றை தயா­ரிக்க வேண்டும். நீங்கள் நினைக்­கலாம் கடந்த 15 வரு­டங்­க­ளாக பல்­க­லைக்­க­ழகம் தொடர்பில் பேசியும் எழு­தியும் வரு­கின்­றார்­களே இந்த அறிக்கை இன்னும் தயா­ரிக்­க­ப்ப­ட­வில்­லையா என்று. கடந்த இரண்டு வரு­டங்­க­ளுக்கு முன்­ன­தாக நாங்கள் அடிக்­கடி கூடி முன்னாள் அமைச்சர் மனோ­க­ணே­சனின் தலை­மையில் திட்­ட­வட்­ட­மான அறிக்­கை­யொன்றை தயா­ரித்­துள்ளோம். 

ஏறக்­கு­றைய 15 பக்­கங்­க­ளுக்கும் அதி­க­மான பக்­கங்­களை கொண்டு இந்த அறிக்கை தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது. இதில் பல்­க­லைக் ­க­ழ­கத்தை அமைப்­ப­தற்­கான காரணம், அதன் கட்­ட­மைப்பு எவ்­வாறு அமை­ய­வேண்டும், அதில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்ள பாடத்­திட்­டங்கள் என்­பன பற்றி குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இந்த அறிக்கை தற்­போது முன்னாள் அமைச்சர் மனோ­க­ணே­ச­னி­டமே இருக்­கின்­றது. இதனை மீளப் பெற­மு­டி­யுமா அல்­லது பிறிதொரு அறிக்­கையை தயா­ரிப்­பதா? என்­பது தொடர்பில் முன்னாள் அமைச்சர் பி.பி தேவ­ராஜூம்  அமைச்சர் ஆறு­முகன் தொண்­டமா­னுமே தீர்­மா­னிக்க வேண்டும்.

இரண்­டா­வ­தாக அமைச்­ச­ரவை பத்­தி­ர­மொன்றை தாக்கல் செய்து, பல்­க­லைக்­ க­ழ­கத்தை உரு­வாக்க அமைச்­ச­ரவை அனு­ம­தியைப் பெற்­றுக்­கொள்ள வேண்டும். மூன்­றா­வ­தாக பல்­க­லைக்­க­ழ­கத்தை அமைப்­ப­தற்­கான நிலம் தொடர்பில் அவ­தானம் செலுத்த வேண்டும். மலை­நாட்டு பகு­தி­யிலே 35 ஆயிரம் ஹெக்டேயர் காணிகள் கைவி­டப்­பட்ட நிலையில் காணப்­ப­டு­கின்­றன. ஹட்டன் –- நுவ­ரெ­லியா வீதி­களில் அவை ­கா­ணப்­ப­டு­கின்­றன. இவ்­வா­றான நிலங்­களை எமக்கு பயன்­ப­டுத்திக் கொள்­ள­ மு­டியும். எனவே நிலத்தை அடை­யாளம் காணு­வதில் எமக்கு சிக்கல் ஏற்­ப­டாது என்று நான் எண்­ணு­கின்றேன்.

நான்­கா­வது விட­ய­மாக நிதி திரட்­டு­வது தொடர்பில் ஆரா­யப்­பட வேண்டும். அர­சாங்கம் தன்­னிடம் பணம் இல்லை என்று கூறி உடனே பல்­க­லைக்­க­ழ­கத்தை நிரா­க­ரிக்­கலாம். இவ்­வா­றான நிலை­யிலே எமக்­கான நிதியை திரட்­டு­வது தொடர்பில் நாம் வெளி­நா­டு­க­ளிலும்  அயல் நாடான இந்­தி­யா­வி­டமும் உத­வி­களை பெற்றுக் கொள்­ள­மு­டியும். 

முன்னாள் மாகாண தமிழ்க்கல்வி அமைச்சர் செந்தில் தொண்­டமான் 

இதன்­போது கருத்து தெரி­வித்த முன்னாள் ஊவா மாகாண தமிழ்க் கல்வி அமைச்சர் செந்தில் தொண்­டமான் கூறி­ய­தா­வது, 

மலை­ய­கத்­துக்­கான பல்­க­லைக்­க­ழகம் தொடர்பில் தற்­போது எடுத்­தி­ருப்­பது முதல் முயற்­சி­யாக இருந்­தாலும் இது வர­லாற்றில் முத­லா­வது அடிக்­கல்­லாகும். மலை­யகப் பல்­க­லைக்­க­ழகம் என்­பது மலை­யகத்­த­வர்கள் ஒவ்­வொ­ரு­வ­ரதும் கன­வாகும். இன்று அதனை நிறை­வேற்றிக் கொள்­வ­தற்­கான நாள் தோற்றம் பெற்­றுள்­ளது. 

மலை­யக பிள்­ளைகள் பல்­க­லைக்­க­ழ­கத்­துக்­கான அனு­ம­தியை பெற்­றாலும் வெளியில் சென்று கற்­பதில் ஏற்­படும் சிர­மங்­களின் கார­ண­மாக சிலர் பல்­க­லைக்­கழகத்துக்கு செல்­ல­மு­டி­யாமல் இருக்­கின்­றனர். இன்னும் சிலர் பெரும் போராட்­டங்­களின் மத்­தியில் கற்­று­வ­ரு­கின்­றார்கள். இந்­நி­லையில் இவ்­வா­றான பல்­க­லைக்­க­ழகம் உரு­வாக்­கப்­பட்டால் எமது மாண­வர்­களும் பட்­ட­ப்ப­டிப்­பு­களை மேற்­கொள்ளக் கூடிய வாய்ப்­பு­களை அதி­க­ரிக்க முடியும். மலை­ய­கத்­துக்­கான பல்­க­லைக்­க­ழகம் உரு­வாக்­க­ப்படும் சந்­த­ர்ப்­பத்­திலே எமக்­கான விடி­வு­கா­லமும் பிறக்கும் என்றே நம்­பு­கின்றோம் என்றும் தெரி­வித்தார்.

இந்த கலந்­து­ரை­யா­டலின் போது, இரண்­டா­வது சுற்­றிலே பல்­க­லைக்­க­ழகம் செல்லும் போது மலை­யக மாண­வர்கள் எதிர்­நோக்கும் பிரச்­சி­னைகள், பல்­க­லைக்­க­ழகத்தின் அவ­சியம், இதற்­காக இது­வரை எடுக்­கப்­பட்­டுள்ள நட­வ­டிக்­கைகள், இனிமேல் எடுக்­கப்­ப­ட­வேண்­டிய நட­வ­டிக்­கைகள் தொடர்பில் கலா­நிதி சந்­தி­ர­மோகன், யசோ­தரா கதிர்­காமன் தம்பி, பேரா­சி­ரியர் எஸ். விஜே­ய­சந்­திரன், கிழக்கு பல்­க­லைக்­க­ழ­கத்தைச் சேர்ந்த கலா­நிதி பிரேம்­குமார்,  கலா­நிதி இரா. ரமேஸ், இலங்கை திறந்த பல்­க­லைக்­க­ழ­கத்தைச் சேர்ந்த கலா­நிதி பிர­பா­கரன்  ஆகியோர் கருத்து தெரி­வித்­தனர்.

நிகழ்­வு­களின் இறு­தியில் உரை­யாற்­றிய முன்னாள் அமைச்சர் பி.பி தேவராஜ், இந்த கலந்­து­ரை­யா­டலின் பின்னர் மலை­யக பல்­க­லைக்­க­ழ­கத்தை உரு­வாக்­கு­வ­தற்கு அனை­வரதும் ஒத்­து­ழைப்­பு­களும் கிடைக்­கப்­பெறும் என்று தனக்கு நம்­பிக்கை ஏற்­பட்­டுள்­ள­தா­கவும், இதன்­போது முன்­வைக்­கப்­பட்ட அபிப்பி­ரா­யங்கள் மற்றும் ஆலோ­ச­னை­களை அடிப்­ப­டை­யாக கொண்டு அமைச்­ச­ரவை பத்­தி­ர­மொன்றை தயா­ரித்து, அதனை அமைச்­ச­ர­வையில் சமர்ப்­பிப்ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை விரைவில் முன்­னெ­டுப்­ப­தா­கவும் தெரி­வித்தார். இவ்­வாறு பல­ரது கருத்­துக்­களின் மத்­தி­யில் மலை­யக பல்கலைக்­க­ழ­கத்துக்­கான அடுத்­தக்­கட்ட நட­வ­டிக்­கை­களின் எதிர்­பார்­ப்பு­க­ளுடன் நிகழ்­வுகள் முடி­வு­ற்­றன.

இதன்­போது நிகழ்ச்சின் நெறி­யாள்­கையை ஜனஹா செல்­வராஜ் மேற்­கொண்­ட­துடன்  சமூகவலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு சார்பில் எஸ். சிவராஜா மற்றும் திருமதி   அனுஷா சிவராஜா ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.