மன்னார்  இரணைஇலுப்பைக்குளம் பூசாரிக்குளம் பகுதியில் சட்டவிரோத 75 ஏக்கருக்கும் அதிகமான காணிகள் காடழிப்பு செய்யப்பட்டுக் கொண்டிருந்த சம்பவமானது வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன்க்கு தெரியப்படுத்தியதை தொடர்ந்து நேரடியாக சென்ற சிவமோகன் எம்பி குறித்த பகுதியில் சட்டவிரோதமாக காடழிப்பு செய்வதை தடுத்து நிறுத்தியுள்ளார் 

பின்னர் மடுப்பிரதேச செயலாளர் மடுப்பிரதேச காணி அதிகாரி வரவழைக்கப்பட்டு   அப்பகுதி மக்களுடனும் தொடர்ந்தும் கலந்துரையாடப்பட்டு சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட பூசாரி குளம் காணிகள் அனைத்தும் அப்பகுதி மக்களுக்கே வழங்கவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. 

அதனடிப்படையில் எதிர்தரப்பின் மதஸ்தலம் ஒன்றுக்கு வழங்க்கபடுவதாக இருந்த காணிக்கான வேண்டுகோள் இரத்து செய்யப்படுகிறது மீண்டும்  அப்பகுதி கிராம மட்ட அமைப்புகளுடன் இந்த பிரச்சனைக்கு சுமூகமான தீர்வினை பெறுவதற்கு கலந்துரையாடல் மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது