தென்னாபிரிக்காவின், பிரையன்ஸ்டனில் பஸ்ஸொன்று தீப் பிடித்து எரிந்ததில் 10 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுதமிக்கப்பட்டுள்ளனர்.

தென்னாபிரிக்காவின் கேப்டவுனிலிருந்து சிம்பாப்வே நோக்கி பயணித்த மேற்படி பஸ் ஒன்றே நேற்றுக் காலை பிரையன்ஸ்டனில் உள்ள வில்லியம் நிக்கோல் ஆஃப்-வலைவில் வைத்து இவ்வாறு தீப் பிடித்து எரிந்துள்ளது.

இதனால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை. எனினும் 10 பேர் காயமடைந்ததுடன், பயணிகளின் உடமைகள் அனைத்தும் தீக்கிரையாகியுள்ளது.