கொழும்பு, பொரளை பகுதியில் பயணித்துகொண்டிருந்த கார் ஒன்று இன்று பிற்பகல் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. எனினும் சாரதி காரை உடனடியாக வீதியோரத்தில் நிறுத்தி விட்டு எவ்வித ஆபத்துமின்றி உயிர் தப்பியுள்ளார்.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீயை கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்தபோதும் கார் முற்றாக தீக்கிரையாகியுள்ளது.

இதனால் பொரளை பகுதியல் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தீப்பற்றியதற்கான காரணம் தெரியாத வகையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.