பிரிட்டனில் ஜெர்சியிலுள்ள சென் சேவியரைச் சேர்ந்த ஒரு பால் பண்ணை பெண் விவசாயி, கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாட ஸ்வெட்டர்களைப்  தனது பசுக்களுக்கு  அணிவித்துள்ளார்.

பெண் விவசாயி பெக்கி ஹூஸ் மிகப்பெரிய கிறிஸ்துமஸ் ரசிகர்களில் ஒருவராவா்.

அவரது பால் பண்ணையிலுள்ள ஐந்து பசுக்களான கரோல், ஹோலி, மேரி, நோயல் மற்றும் மரியா டெய்ரி ஆகியவற்றுக்கு ஸ்வெட்டர்களை அணிந்துள்ளார்.

இது பற்றி கருத்து தெரிவித்துள்ள பெக்கி ஹூஸ்,

"நாங்கள் பண்ணையில் கிறிஸ்மஸ் பண்டிகையை விரும்புகிறோம். நான் அதை என் வழியில், அக்டோபர் முதல் கிறிஸ்துமஸ் கரோல்களை பாடுவோம்.

"சரியான வடிவமைப்பை பசுகளுக்கு ஒழுங்குபடுத்த சிறிது நேரம் பிடித்தது, ஆனால் சிறந்த தோற்றத்தில் இறங்கியுள்ளோம் என்று நினைக்கிறோம். சண்டா நகரத்திற்கு வருவதற்கு, இன்னும் சில நாட்களே உள்ளதால், நிச்சயமாக கிறிஸ்துமஸ் உணர்வைப் பெற்றுள்ளோம்“ எனத் தெரிவித்துள்ளார்.

வெண்ணெய், தயிர், சீஸ் மற்றும் புகழ்பெற்ற ஜெர்சி ஐஸ்கிரீம் உள்ளிட்ட தயாரிப்புகளை 250 ஆண்டுகளுக்கும் மேலான தூய்மையுடன், அதிக உற்பத்தி செய்யும் ஜெர்சி உலகின் மிகச் சிறந்த பால் இனமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.