(செ.தேன்மொழி)

வெல்லவாய பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞர்கள் ஏழுப் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெல்லவாய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இன்று பொலிஸார் முன்னெடுத்த சுற்றிவளைப்புகளின் போதே குறித்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டதாக வெல்லவாய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

எல்ல , வெல்லவாய மற்றும் மொணராகலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 17 - 26 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப் பொருளுக்கு அடிமையாகியுள்ள இந்த இளைஞர்களில் , மூவரிடமிருந்து 70 மில்லி கிராம் ஹெரோயினும் , ஏனைய நால்வரிடமிருந்து 60 மில்லி கிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளது.

பொலிஸார் இளைஞர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.