கொழும்பு மாநகர சபையின் 150ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு இலங்கையின் முன்னணி 8 கால்பந்தாட்ட அணிகள் மோதும் மேயர்ஸ் கிண்ணக் கால்பந்தாட்டத் தொடர் நடைபெறவிருக்கின்றது.
இத்தொடரை கொழும்பு மாநகர சபையின் விளையாட்டுத்துறை ஏற்பாடு செய்துள்ளது. இதில் இலங்கையின் முன்னணி கால்பந்து கழக அணிகளான ஜாவா லேன், சௌண்டர்ஸ், புளூ ஸ்டார், கலம்போ எவ்.சி., சுப்பர் சன், ரினோன், கிறிஸ்டல் பெலஸ் ஆகிய அணிகள் பங்குபற்றுகின்றன. இதில் எட்டாவது அணியாக மேயர்ஸ் லெவன் அணி கலந்துகொள்கிறது.
இது குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று கொழும்பு மேயர் இல்லத்தில் நடைபெற்றது. இதில் கொழும்பு மாநகர மேயர் ஏ.ஜே.எம். முஸம்மில் மற்றும் பிரதி மேயர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் அனுர டி சில்வா மற்றும் சம்மேளனத்தின் செயலாளர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இதில் பேசிய கொழும்பு மேயர் முஸம்மில், மேயர்ஸ் கிண்ணம் என்ற பெயரில் கால்பந்தாட்டப் போட்டிகள் ஆரம்ப காலத்தில் நடைபெற்றுவந்தன. அது கடந்த சில வருடங்களாக நடைபெறவில்லை. அதை நாம் மீண்டும் ஆரம்பித்திருக்கின்றோம். கால்பந்தாட்டம் என்பது எமக்கு மிகவும் நெருக்கமான ஒரு விளையாட்டு. அதேபோல் கால்பந்தாட்டத்தை ஊக்குவிக்கும் கடமையும் எமக்கு இருக்கிறது அதனால் கொழும்பு மாநகர சபையினூடாக இந்த கிண்ணத் தொடரை நடத்துகிறோம். எதிர்காலத்தில் விளையாட்டுத்துறைக்கு பல சேவைகளையாற்ற நாம் காத்திருக்கிறோம் என்றார்.
இந்தத் தொடர் எதிர்வரும் 6ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை கொழும்பு சுகததாச அரங்கில் நடைபெறவிருக்கிறது. இதில் முதல் சுற்றில் ஒவ்வொரு அணிகளும் நொக்அவுட் சுற்றில் மோதும். அதன்பிறகு அரையிறுதிப்போட்டியில் பலப்பரீட்சை நடத்தி இறுதிப் போட்டிக்கு தெரிவாகும் அணிகள் 12ஆம் திகதி நடைபெறவிருக்கின்ற இறுதிப் போட்டி யில் விளையாடவுள்ளன.
இதில் சம்பிய னாகும் அணிக்கு வெற்றிக்கிண்ண மும் 5 இலட்சம் ரூபா பணப்பரிசும் வழங்கப்படவிருக்கிறது. அதேவேளை இரண்டாமிடத்தைப் பெறும் அணிக்கு வெற்றிக்கிண்ணத் தோடு 3 இலட்சம் பணப்பரிசும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM