Published by R. Kalaichelvan on 2019-12-12 15:47:32
கடலுக்கு செல்லும் பல நாள் மீன்பிடியாளர்களின் பிளாஸ்டிக் பாவனை , கடலில் வீசப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் குறித்து கவனம் செலுத்தப்படவுள்ளதாக கடல் மாசுறல் அதிகார சபை (MEPA) தெரிவித்துள்ளது.

அத்தோடு கடல் பாதுகாப்பு தொடர்பில் கடலை அண்டிய பிரதேசங்களில் இடம்பெறும் பிளாஸ்டிக் பாவனை தொடர்பிலும் ஆராயவுள்ளதாக சபை சுட்டிக்காட்டியுள்ளது.
அந்நதவகையில் கடலுக்கு செல்லும் மீனவர்கள் 500 லீற்றர் முதல் 1000 லீற்றர் வரையான நீரை கொண்டு செல்கின்றனர்.
இந்நிலையில் 5 லீற்றர் போத்தல்களில் நீரை கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கடல் மாசுறல் அதிகார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.