கேஸ்ட்ரோபராசிஸ்  ( Gastroparesis) எனப்படும் இரைப்பை வாத பாதிப்புக்குரிய சிகிச்சை

Published By: Daya

12 Dec, 2019 | 12:21 PM
image

பக்கவாதம் என்பது கை, கால், முகம், கண் ஆகிய உடலுறுப்புகளில் ஏற்படும் பாதிப்பு என்று அறிந்திருக்கிறோம். ஆனால் எம்முடைய வயிற்றுப் பகுதியிலுள்ள இரைப்பையிலும் வாதம் ஏற்படும். இதற்கு கேஸ்ட்ரோபராசிஸ் என்று பெயர். இதற்கு தற்போது நவீன சத்திர சிகிச்சை அறிமுகமாகியிருக்கிறது.

நீங்கள் உட்கொள்ளும் திரவ உணவு ஒரு மணித்தியாலத்திலும், திட உணவு நான்கு மணி தியாலத்திலும் வயிற்றுக்குள் சென்று செரிமானமாகி விடவேண்டும். இதுதான் இயல்பான ஆரோக்கியமான செரிமான மண்டலத்தின் செயற்பாடு. ஆனால் சிலருக்கு உணவு உட்கொண்டு 12 மணி தியாலத்திற்குப் பிறகும் செரிமானம் ஆகாமல் வயிற்றிலேயே, அதாவது இரைப்பையிலேயே பத்து சதவீத உணவு தங்கினாலும் கூட அவருக்கு இரைப்பை வாத பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

இத்தகைய பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு வயிற்று வலி, வாந்தி வரும் உணர்வு, உணவு உட்கொள்ள ஆரம்பித்ததும் வயிறு நிறைந்தது போன்ற உணர்வு போன்ற அறிகுறிகள் தோன்றலாம். சிலருக்கு உணவு உட்கொண்டு  6 அல்லது 8 மணி நேரம் கழித்து வாந்தி எடுப்பார்கள்.

இத்தகைய அறிகுறிகள் தோன்றினால் அவர்களுக்கு இரைப்பை வாத பாதிப்பின் ஆரம்ப நிலை உருவாகி இருக்கிறது என்றும் பொருள் கொள்ளலாம். அதே தருணத்தில் ரத்த சீனியின் அளவு கட்டுப்பாட்டில் இல்லாமல் நீண்ட நாட்கள் இருந்தால் அவர்களுக்கும் இதுபோன்ற பாதிப்பு வரக்கூடும். சிலருக்கு வலி நிவாரணி மாத்திரைகளை வைத்திய பரிந்துரை இல்லாமல் தொடர்ந்து எடுக்கும் போதும் இது போன்ற பக்க விளைவுகள் ஏற்படக்கூடும்.

இவர்கள் இரைப்பை வைத்திய நிபுணரை சந்தித்து, முறையாக ஆலோசனை பெற வேண்டும், அவர்கள் பரிந்துரைக்கும் சின்டிகிராபி (Scintigraphy) எனப்படும் பிரத்யேக ஸ்கேன் பரிசோதனையை மேற்கொண்டு, இத்தகைய பாதிப்பை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்.

பாதிப்பு ஆரம்ப நிலையில் இருந்தால் உணவு முறையை மாற்றிக் கொள்ள வேண்டும். இது குறித்து வைத்தியர்கள் தரும் பரிந்துரையை உறுதியாக பின்பற்றவேண்டும். இதற்குப் பிறகும் பாதிப்பு தொடர்ந்தால்.

மீண்டும் ஒருமுறை பரிசோதனை செய்து பாதிப்பினை உறுதிப்படுத்தி, இரைப்பிலிருந்து சிறுகுடலுக்கு செல்லும் பாதையில் பிரத்யேக சத்திர சிகிச்சையை செய்து, இத்தகைய பாதிப்பை சீராக்கலாம். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நரம்பு வலிக்கு நிவாரணம் அளிக்கும் நவீன...

2025-01-13 15:56:02
news-image

பியோஜெனிக் ஸ்போண்டிலோடிசிடிஸ் எனும் முதுகெலும்பு தொற்று...

2025-01-09 16:19:03
news-image

புல்லஸ் எம்பஸிமா எனும் நுரையீரல் நோய்...

2025-01-08 19:25:03
news-image

இன்சுலினோமா எனும் பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2025-01-07 17:23:56
news-image

கார்டியோபல்மனரி உடற்பயிற்சி சோதனை - CPET...

2025-01-06 16:52:15
news-image

ஹைபர்லிபிடெமியா எனும் அதீத கொழுப்புகளை அகற்றுவதற்கான...

2025-01-05 17:50:36
news-image

ரியாக்டிவ் ஒர்தரைடீஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2025-01-03 16:39:17
news-image

உணவுக் குழாய் பாதிப்பு - நவீன...

2025-01-02 16:38:45
news-image

கை விரல் நுனியில் ஏற்படும் பாதிப்பிற்கான...

2025-01-01 21:40:07
news-image

யூர்டிகேரியா எனும் தோல் அரிப்பு பாதிப்பிற்கு...

2024-12-31 17:09:55
news-image

ஆட்டிசம் குழந்தைகளுக்கு நிவாரணம் அளிக்கும் நவீன...

2024-12-30 16:33:25
news-image

தாடை வலி பாதிப்பிற்குரிய நவீன சத்திர...

2024-12-27 16:53:23