தமி­ழர்­க­ளுக்­கான பிரச்­சி­னை­களை தீர்க்கும் எண்ணம் ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­ப­க் ஷ­விடம் இல்­லை­யென்­பது தெளி­வாக தெரி­கி­றது என்று தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிவ­ஞானம் சிறீ­தரன் தெரி­வித்தார். 

பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரின் ஊரெ­ழுச்சி வேலைத்­திட்­டத்­திற்­க­மைய அமைக்­கப்­பட்ட பூந­கரி வாடி­யடி சந்­தைக்­கான கட்­டி­டத்­தொ­கு­தியை நேற்று  திறந்து வைத்து உரை­யாற்­று­கை­யி­லேயே

அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். 

பூந­கரி பிர­தேச சபையின் தவி­சாளர் ஐயம்­பிள்ளை தலை­மையில் நடை­பெற்ற நிகழ்வில் உப­த­வி­சாளர் பிர­தேச செய­லக உத­வித்­திட்­ட­மிடல் பணிப்­பாளர், பிர­தேச சபையின் செய­லாளர், பிர­தேச சபை உறுப்­பி­னர்கள், சந்தை வர்த்­த­கர்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்­து­கொண்ட அந்­நி­கழ்வில் அவர்  மேலும் தெரி­விக்­கையில் ,

ஜனா­தி­ப­தி­யாக தெரிவு செய்­யப்­பட்டு பதவி ஏற்ற நாளி­லி­ருந்து  நான் இந்த நாட்டின் ஜனா­தி­ப­தி­யாக சிங்­கள பௌத்த மக்­களின் வாக்­கு­களால் மட்டும் தெரிவு செய்­யப்­பட்டேன் என்­கின்ற மம­தையில் கோத்­த­பாய ராஜ­பக்ஷ கூறி வரு­கின்றார்.

இது­வரை வடக்கு மாகா­ணத்­திற்கு ஆளு­நரைக் கூட தெரிவு செய்ய மனம் இல்­லா­தவர் தமி­ழர்­க­ளுக்­கான பிரச்­சி­னை­களை தீர்ப்­பாரா?  இந்­திய விஜ­யத்தின் போது இந்­தி­யாவால் கொண்டு வரப்­பட்ட 13 ஆவது திருத்தச் சட்­டத்தில் உள்ள பொலிஸ் விட­யங்­களை இந்­தி­யாவில் வைத்தே நடை­முறை படுத்த முடி­யாது என கூறு­பவர் எமக்கு அதி­கா­ரங்­களை தரு­வாரா என்­பது சந்­தே­கமே. 

எமது மக்­களின் கொலை­க­ளுக்கு கார­ண­மான ஒரு போர்க்­குற்­ற­வா­ளி­யாக இருப்பவர் எம்மை இன்னும் அரவணைத்துச் செல்லும் மனப்பாங்கிற்கு அவர் வரவில்லை. எமக்கான உரிமைகள் கிடைக்கப் பெற்றால் எமது அபிவிருத்திப் பணிகளை நாம் சுயமாகவே மேற்கொள்வோம் என்றார்.