கண்டி வைத்தியசாலையின் வைத்தியர்கள், வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் தாதியர்கள் உட்பட 48 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டி வைத்தியசாலை பணிப்பாளர் நிசங்க விஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இதனால் வைத்தியசாலையை சுற்றியுள்ள டெங்கு பரவக்கூடிய இடங்களை சுத்தப்படுதும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் வைத்தியசாலை பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.