பாகிஸ்தான் சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் அதிகாரிகளை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சந்தித்து கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

இந்தக் கலந்துரையாடலானது நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் உடன் மீண்டும் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு வருகை தந்தமைக்காக நன்றியை தெரிவித்த இம்ரான் கான், அதற்கான பெருமைகள் அனைத்து பாதுகாப்பு கடமைகளை தந்து ஒத்துதழைத்த அதிகாரிகளை சாரும் எனவும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் இந்த தொடர் சம்பந்தமாகும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இலங்கை கிரிக்கெட் நிறுவன அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.