மூன்று மாணவர்களை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியக் குற்றச்சாட்டில் கைதான ஆசிரியரை, எதிர்வரும் 6 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு பதுளை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் சம்பிக்க ராஜபக்ஷ, இன்று  உத்தரவிட்டார். 

பதுளை, கந்தகெட்டியவிலுள்ள பிரபல பாடசாலையில் பணிப்புரிந்து வந்த ஆசிரியரே விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளார். இவர், தரம் 6 இல் கல்வி கற்று வந்த மூன்று மாணவர்களை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

பாதிக்கப்பட்ட மாணவர்களில் இருவர், வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் மற்றைய மாணவன் தொடர்பிலான விவரங்களை திரட்டி வருவதாகவும் கந்தகெட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

(வத்துகாமம் நிருபர்)