தவறான மருந்தேற்றலினால் உயிரிழந்த மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காங்கேயனோடையைச் சேர்ந்த 9ம் ஆண்டு மாணவியின் சடலம் நேற்று மாலை காங்கேயனோடை பத்ர் பள்ளிவாயல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஆரையம்பதி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட காங்கேயனோடை அல் அக்சா கல்லூரியில் 9ம் ஆண்டில் கல்வி பயிலும் பாத்திமர் ஜப்றா என்ற மாணவி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

குறித்த மாணவிக்கு 2 மில்லி மருந்தை ஏற்றுவதற்கு பதிவாக 20 மில்லி மருந்தை குறித்த வைத்தியர் ஏற்றியதால் அந்த மாணவி நேற்று முன்தினம் மாலை உயிரிழந்தார்.

குறித்த மாணவியின் மரணம் வைத்தியசர்களின் தவறினால் ஏற்பட்டது என்பதை வைத்தியசாலை பணிப்பாளர் கலாரசஞ்சனி ஏற்றுக்கொண்டதுடன் சுகாதார அமைச்சசு இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.