அரசியலமைப்பு பேரவையின் தலைவரான சபாநாயகர் கரு ஜெயசூரியவின் தலைமையில் இக் கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

19ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு அமைய ஸ்தாபிக்கப்பட்ட அரசியலமைப்புப் பேரவையில் சபாநாயகர், பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் உத்தியோகபூர்வமாக பங்குப்பற்றுவார்கள்.

அத்தோடு எதிர்க்கட்சித் தலைவராக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் சஜித் பிரேமதாசவிற்குஅரசியலமைப்பு பேரவை கூட்டத்திற்கு இதுவரை அழைப்பு விடுக்கப்படவில்லை.

பாராளுமன்றம் கூடி எதிர்க்கட்சித் தலைவராக அவர் பதவி ஏற்காமையினாலேயெ இதற்கான காரணமாகும்.

இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் இன்றி அரசியலமைப்பு சபை கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.