கண்டி சுற்றுலாப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவல் ஒன்றின்படி மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட 20 இற்கும் அதிகமான பொதிகள் கொண்ட உடைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கண்டி சுதும்பொல பிரதேசத்தில் இன்று சுற்றுலா விசாவில் வருகை தந்துள்ள இரண்டு இந்தியப் பிரஜைகளும் அவர்களுக்குப் புகழிடம் கொடுத்த இலங்கைப் பெண் ஒருவரும் கைதாகியுள்ளனர். 

மேலும், உடன் வைத்திருந்த உடைகள் மற்றும் இதர துணிவகைகளும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன. 

மேற்படி உடைகளின் பெறுமதி சுமார் 10 இலட்ச ரூபா அளவில் இருக்குமென கண்டிப் பொலிஸார் தெரிவித்தனர்.

வர்த்தக நோக்கில் இவை இங்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. சல்வார், சாரி, சிறுவர் உடைகள் மற்றும் இதர துணிவகைகள் இதில் அடங்குவதாகத் தெரிய வருகிறது. 

(வத்துகாமம் நிருபர்)