(எம்.ஆர்.எம்.வஸீம்)

கொழும்பு மாநகரசபையின் 2020ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட அறிக்கை மாநகரசபை மேயர் ரோஸி சேனாநாயக்கவினால் நாளை காலை 10 மணிக்கு சமர்ப்பிக்கப்பட இருக்கின்றது.

வெளியிடப்பட்டிருக்கும் அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்ட அறிக்கையின் சுறுக்க அறிக்கையின் பிரகாரம் 2020 வருடத்துக்கு உத்தேச எதிர்பார்க்கை வருமானமாக 16145994000 கோடி ரூபாவும் உத்தேச எதிர்பார்க்கை செலவீனம் 16145994000 கோடி ரூபாவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அடுத்த வருடத்துக்காக எதிர்பார்க்கப்படும் வரி வருமானம் 481கோடி ரூபா எனவும் மாநகரசபை பிரதி பொருளாளர் என். பி. கொத்தளாவல வெளியிட்டுள்ள கணக்கறிக்கையின் சுறுக்கத்தில்  குறிப்பிடப்பட்டுள்ளது.