(நா.தனுஜா)

ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் மொடெகி டொஷிமிட்சு இருநாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாளைய தினம் இலங்கை வரவிருக்கிறார்.

கோத்தபாய ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவியேற்றுக்கொண்ட பின்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் நாளை மாலை 5.30 மணிக்கு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தை வந்தடைவார்.

இந்நிலையில் மொடெகி டொஷிமிட்சு நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சில் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு எதிர்பார்த்திருப்பதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்திருக்கிறது. 

நாளை மாலை இலங்கைக்கு வருகைதரும் ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் எதிர்வரும் சனிக்கிழமை வரை நாட்டில் தங்கியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.