நடிகர் ஆர்யா நடிப்பில் தயாராகியிருக்கும் ‘டெடி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியிருக்கிறது.

‘மகாமுனி’ படத்திற்கு பிறகு நடிகர் ஆர்யா நடிப்பில் தயாராகியிருக்கும் ‘டெடி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியிருக்கிறது. இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக சயீஷா நடித்திருக்கிறார்.

திருமணத்திற்குப் பிறகு இருவரும் இணைந்து நடிக்கும் முதல் திரைப்படம் இது. இவர்களுடன் சாக்சி அகர்வால், சதீஷ், கருணாகரன், மாசூம் சங்கர், இயக்குநர் மகிழ்திருமேனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.  நாணயம், நாய்கள் ஜாக்கிரதை, மிருதன், டிக் டிக் டிக் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன் இப்படத்தை கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கிறார். யுவா ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு டி இமான் இசையமைத்திருக்கிறார்.

அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இதை தொடர்ந்து படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. ஸ்டூடியோ கிரீன் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே  ஈ. ஞானவேல் ராஜா தயாரித்திருக்கும் ‘டெடி’ கோடை விடுமுறையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.