மிக் விமானக் கொள்வனவு விவகாரம்: உதயங்கவின் பிடியாணையை  மீளப்பெற நீதிமன்றம் மறுப்பு

Published By: Digital Desk 3

11 Dec, 2019 | 02:03 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

சர்­வ­தேச பொலி­ஸாரின்  உத­வி­யுடன் கைது செய்­வ­தற்­கான சிவப்பு அறி­வித்தல், பிடி­யா­ணையை மீளப்பெறு­மாறும் அவ்­வாறு மீளப்பெறும் பட்­சத்தில்  இலங்­கைக்கு வந்து மிக் விமான கொள்­வ­னவு விவ­கார விசா­ர­ணை­க­ளுக்கு ஒத்­து­ழைப்பு வழங்க தான் தயா­ராக இருப்­ப­தா­கவும்  ரஷ்­யா­வுக்­கான முன்னாள் இலங்கை தூதுவர் உத­யங்க வீர­துங்க முன்­வைத்த கோரிக்­கையை கோட்டை நீதி­மன்றம் நேற்று நிரா­க­ரித்­தது. 

ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி அனில் சில்­வாவின் நெறிப்­ப­டுத்­தலில் சட்­டத்­த­ரணி ஜி. குண­ரத்ன இதற்­கான கோரிக்­கையை நேற்று மன்றில் முன்­வைத்தார்.  இத­னை­ய­டுத்து, பிடி­யாணை பிறப்­பிக்­கப்­படும் போது இருந்த நிலைமை எந்தவிதத்­திலும் மாற­வில்லை என சுட்­டிக்­காட்­டிய நீதிவான் ரங்க திஸா­நா­யக்க அப்­பி­டி­யா­ணையை  மீளப்பெற முடி­யாது எனக் கூறி சட்­டத்­த­ர­ணியின் கோரிக்­கையை நிரா­க­ரித்தார்.

2006 ஆம் ஆண்டு மிக்- 27 ரக விமான கொள்­வ­னவின்போது இடம்­பெற்ற சுமார் 14 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்கள் நிதி மோசடி தொடர்பில் உத­யங்க வீர­துங்க சந்­தேக நப­ராக பெய­ரி­டப்­பட்டு பிடி­யா­ணையும் பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.  2016.10.20 ஆம் திகதி அப்­போ­தைய கோட்டை நீதி­வா­னாக இருந்த லங்கா ஜய­ரத்ன குற்­ற­வியல் சட்­டத்தின் 63 (1) அ பிரிவின் கீழ்  இந்த பிடி­யா­ணையை பிறப்­பித்­தி­ருந்தார்.

அதன் பின்னர், ஏற்­க­னவே உத­யங்­கவின் சட்­டத்­த­ர­ணி­யான ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி அனில் சில்வா, கடந்த 2017.08.11 ஆம் திக­தியும் பிடி­யா­ணையை மீளப்பெறு­மாறு கோரிய போதும் அதனை அப்­போது நீதிவான் லங்கா ஜய­ரத்ன நிரா­க­ரித்­தி­ருந்தார்.  அந்த நிரா­க­ரிப்பு உத்­த­ரவை 2017.08.21 ஆம் திகதி அவர் பிறப்­பித்­தி­ருந்தார்.

இந்நிலையில் அப்­போ­தி­ருந்த நிலை­மையும் தற்­போது உள்ள நிலை­மையும் வேறு வேறு எனக் கூறி  சட்­டத்­த­ரணி  ஜி. குண­ரத்ன பிடி­ யா­ணையை இரத்து செய்யக் கோரிய போது,  நிலை­மையில் ஏற்­பட்­டுள்ள மாற்றம் என்ன என நீதிவான் ரங்க திஸா­நா­யக்க அவ­ரிடம் கேள்வி எழுப்­பினார். குறித்த வழக்கு அர­சியல் பழி வாங்கல் நோக்கில் தொடுக்­கப்­பட்­டது என  சட்­டத்­த­ரணி குண­ரத்ன கூறியபோது, 2016.10.20 ஆம் திகதி அப்­போ­தைய நீதிவான் லங்கா ஜய­ரத்ன பிடி­யாணை வழங்­கும்­போது இருந்த நிலை­மையில் எந்த மாற்­றமும் இல்லை என சுட்­டிக்­காட்­டிய கோட்டை நீதிவான் ரங்க திஸா­நா­யக்க பிடி­யா­ணையை மீளப்பெற முடி­யாது என அறி­வித்தார்.

2006 ஆம் ஆண்டு உக்­ரே­னி­ட­மி­ருந்து இலங்கை மிக் 27 ரக போர் விமா­னங்கள் நான்­கினை கொள்­வ­னவு செய்­தி­ருந்­தது. இந்நட­வ­டிக்­கை­யா­னது அப்­போ­தைய ரஷ்ய  தூதுவர் உத­யங்க வீர­துங்­கவின் ஊடா­கவே முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தது. இந் நிலையில் இது குறித்த ஒப்பந்தங்களும் விமானப்படையிடமிருந்து காணாமல் போயுள்ள நிலையில் இக்கொள்வனவு தொடர்பில் 14 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மோசடி இடம்பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08