யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் ரயில் மோதி படுகாயமடைந்தவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.நேற்று செவ்வாய்க்கிழமை காலை கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கிப் பயணித்த தபால் ரயில் கோண்டாவில் ரயில் நிலையத்திற்கு அருகில் மோதியதில் குறித்த நபர் படுகாய மடைந்தார்.

இதன்பின்னர் விபத்துக்குள்ளானவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.

இந்நிலையில்  குறித்த நபர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்ததாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.உயிரிழந்தவர் 50 வயது மதிக்கத்தக்கவர்.

எனினும் அவர் தொடர்பான தகவல்கள் எதுவும் கிடைக்கபெறவில்லை என்று கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளைக் கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.