சுவீடனில் நடைபெற்ற நோபல் பரிசளிப்பு விழாவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தம்பதி வேஷ்டி, சேலையில் சென்று பரிசு பெற்றது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

 இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும், அமெரிக்கப் பொருளாதார நிபுணருமான அபிஜித் பானர்ஜி மற்றும் அவரது மனைவியும் பிரெஞ்சு பொருளாதார வல்லுநருமான எஸ்தர் டுப்லோ ஆகியோர் இந்த ஆண்டின் பொருளாதார அறிவியல் துறைக்கான நோபல் பரிசுக்குத் தெரிவுச் செய்யப்பட்டனர்.

 இந்த பரிசளிப்பு விழா, சுவீடனிலுள்ள ஸ்டாக்ஹாம் கன்சர்ட் அறையில் நடைபெற்றது. இதில் பரிசு பெற சென்ற அபிஜித் பானர்ஜி, தங்க நிற பார்டர் வைத்த வேஷ்டியும், கறுப்பு நிற மேல் கோட்டும் அணிந்திருந்தார். அவரது மனைவி எஸ்தர், பச்சை மற்றும் ஊதா நிறம் கலந்த சேலையும், சிவப்பு நிற மேற்சட்டையும் அணிந்திருந்தார்.

 தம்பதியர், தமிழக பாரம்பரிய முறையில் வேஷ்டி, சேலை அணிந்து சென்று பரிசு பெற்றது பலரின் பாராட்டையும் பெற்றுள்ளது. அத்துடன், இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி, தம்பதிக்குப் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.