காங்கேசன்துறையில் பொலிஸ் சிற்றுண்டிச்சாலை ஒன்று இன்று திறந்துவைக்கப்பட்டது.

பொது மக்கள் மற்றும் பொலிஸாருக்கு குறைந்த விலையில் சிற்றுண்டிகளை வழங்குவதற்காக குறித்த சிற்றுண்டிச் சாலை திறக்கப்பட்டுள்ளதாக காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர் சி.டபிள்யூ. சேனாதிரா தெரிவித்தார்.

இந்தச் சிற்றுண்டிச்சாலை காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரிக்கு அண்மையாக உள்ள இடத்தில் இன்று காலை திறந்துவைக்கப்பட்டது.

வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி விஜேயவர்த்தன, யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகேஸ் சேனாரத்னவும் இணைந்து சிற்றுண்டிச்சாலையைத் திறந்து வைத்தனர்.

குறித்த சிற்றுண்டிச் சாலை காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர் கீழ் இயங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை, இந்த நிகழ்வுக்கு வருகை தந்த யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகேஸ் சேனாரத்ன தனது குடும்பத்தினருடன் கீரிமலை நகுலேஸ்வரத்தில் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டார்.