(பாகிஸ்தான், ராவல்பிண்டியிலிருந்து நெவல் அன்தனி)

இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ராவல்பிண்டியில் இன்று காலை குறித்த நேரத்துக்கு (பாகிஸ்தானில் காலை 10.15 மணி) ஆரம்பமான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியுடன் 10 வருடங்கள், 10 மாதங்களின் பின்னர் பாகிஸ்தானில் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆரம்பமானது.

பாகிஸ்தானில் வரலாற்று முக்கியம்வாய்ந்தாக அமைந்த இந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணி தீர்மானித்தது.

இலங்கை அணியில் ஆரம்ப வீரராக லஹிரு திரிமான்னவுக்குப் பதிலாக ஓஷத பெர்னாண்டோ ஆரம்ப வீரராக பெயரிடப்பட்டார். 

தனது முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் 3ஆம் இலக்க வீரராக விளையாடிய ஓஷத பெர்னாண்டோ, ஆரம்ப வீரராக விளையாடுவது இதுவே முதல் தடவையாகும்.

இன்றைய போட்டியில் இலங்கை அணியில் துடுப்பாட்ட வரிசை பிரகாரம் திமுத் கருணாரட்ன (தலைவர்), ஓஷத பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், ஏஞ்சலோ மெத்யூஸ், தினேஷ் சந்திமால், நிரோஷன் திக்வெல்ல (விக்கெட் காப்பாளர்), தனஞ்சய டி சில்வா, டில்ருவன் பெரேரா, விஷ்வா பெர்னாண்டோ, கசுன் ரஜித்த, லஹிரு குமார.

12ஆவது வீரர்: லக்ஷான் சந்தகேன்.

பாகிஸ்தான் அணியில் இளம் ஆரம்ப வீரர் அபிட் அலி, வேகப்பந்துவீச்சாளர் உஸ்மான் கான் ஷின்வாரி ஆகியோர் அறிமுக வீரர்களாக இடம்பெறுகின்றனர்.

பாகிஸ்தான் அணியில் துடுப்பாட்ட வரிசை பிரகாரம் ஷான் மசூத், அபிட் அலி, பாபர் அஸாம், அசாத் ஷவிக், ஹரிஸ் சொஹெய்ல், முஹம்மத் ரிஸ்வான், முஹம்மத் அபாஸ், ஷஹீன் ஷா அப்றிடி, நசீம் ஷா, உஸ்மான் கான் ஷின்வாரி. 12ஆவது வீரர்: இமாம் உல் ஹக் ஆகிய வீரர்கள் துடுப்பாட்ட வரிசைகளில் காணப்படுகின்றனர்.

அத்தோடு இடம்பெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி வருகின்றது.

இந்நிலையில் இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவிற்கு எவ்வித விக்கெட் இழப்பின்றி  59 ஓட்டங்களை பெற்று துடுப்பெடுத்தாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.