கொழும்பின் சில பிரதேசங்களில் இன்று இரவு 10 மணிமுதல் நாளை காலை 5 மணி வரையிலான 7 மணித்தியாலங்கள் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இந்நிலையில் மிரிஹான, எத்துல்கோட்டை, புறக்கோட்டை, நுகேகொடை, நாவல, கங்கொடவில மற்றும் உடஹமுல்ல ஆகிய பகுதிகளிலேயே இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

குறித்த பகுதியில் இடம்பெறும் புனரமைப்பு காரணமாகவே நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கள் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.