இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட்போட்டிக்கான நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றிபெற்றுள்ளது.

இந்நிலையில் இலங்கை அணி தலைவர் திமுத் கருணாரத்ன முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.

அந்த வகையில் முதலில் துடுப்பெடுத்தாடும் இலங்கை அணி 10.2 ஓவர்களில் 30 ரன்களை பெற்றுள்ளது.

அத்தோடு குறித்த போட்டிகள் பாகிஸ்தானின் ராவல்பிண்டி மைதானத்தில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.