வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக சட்டவிரோதமான முறையில் வளர்த்து வந்த (இந்தியன் நட்சத்திர) வகையைச் சேர்ந்த 51 ஆமைகளுடன் விமானப்படை புலனாய்வு பிரிவினரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாலாவி விமானப்படை புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய நேற்று இரவு விருதோடைப்பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட வேளை புதிதாக நிர்மானித்து வந்த வீட்டுக் கட்டிடத்தின் குளியரையில் குறித்த (இந்தியன் நட்சத்திர) வைகையைச் சேர்ந்த ஆமைகள் காணப்பட்டதையடுத்தை அடுத்து புத்தளம் வனஜீவராசிகள் கட்டுப்பாட்டுத் திணைக்களத்தினருக்கு தகவலை வழங்கியுள்ளனர்.

 இதன் போது விருதோடைப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் சந்தேகத்தின் பேர்ல் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன் போது சம்பவ இடத்திற்குச் சென்ற வனஜீவராசிகள்  கட்டுப்பாட்டுத் திணைக்கள  அதிகாரிகள் குறித்த ஆமைகளை மீட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக  நபரை வனஜீவராசிகள் திணைக்கள கட்டுப்பாட்டுப் பிரிவினருக்கு ஒப்படைக்கப்பட்டு மேலதிக நடவடிக்கைகளுக்காக புத்தளம் பிராந்திய வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 

இதன் போது அப்பகுதியில் காணப்பட்ட நீர்க் குட்டைகளிலும் சந்தேக நபர் ஆமைகளை வளர்த்து வந்ததாக தெரியவந்துள்ளது.

குறித்த ஆமைகள் (இந்தியன் நட்சத்திர) வகையைச் சேர்ந்தது என வனஜீவராசிகள் திணைக்கள உதவி அதிகாரி எஸ். சஞ்சீவ  தெரிவித்தார். குறித்த ஆமைகள் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்வதற்காக வளர்க்கப்பட்டு வந்ததாக முதற்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. 

மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து இன்று புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள உதவி அதிகாரி மேலும் தெரிவித்தார்.