அமெரிக்காவின் ஜேர்சி நகரில்  Jersey City, இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

 நகரின் வீதிகளில் இடம்பெற்ற துப்பாக்கி மோதலில் காவல்துறையை சேர்ந்த ஒருவர் பொதுமக்கள் மூவர் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இது பயங்கரவாத சம்பவமில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இரண்டு இடங்களில் துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றது முதலில் மயானமொன்றில் ஆரம்பித்த மோதலில் காவல்துறை உத்தியோகத்தர் கொல்லப்பட்டார் பின்னர் வணிக வளாகமொன்றில் ஆறு உடல்களை மீட்டுள்ளோம் என காவல்துறையினர் தெரிவித்தள்ளனர்.

நான்கு மணித்தியாலங்களாக காவல்துறையினர் மீது தாக்குதல் இடம்பெற்றது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பல காவல்துறையினர் காயமடைந்துள்னர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.