மோசடியான முறையில் வர்த்தகத்தில் ஈடுபடும் வர்த்தகர்களை சுற்றிவளைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந் நடவடிக்கை பண்டிகைக் காலம் முடிவடையும் வரை இடம்பெறவுள்ளது.

கூடுதலான விலையில் பொருட்களை விற்பனை செய்வோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் சபை சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)