ஜப்பான் போர்க்கப்பல் திருகோணமலை துறைமுகத்தில்

Published By: R. Kalaichelvan

10 Dec, 2019 | 09:25 PM
image

(ஆர்.யசி)

ஜப்பான் நாட்டின் கடற்படைக்கு சொந்தமான தற்காப்பு கடற்படை போர்க்கப்பலான "டி.டி.102 ஹருசாம் " மூன்று நாட்கள் விஜயம் ஒன்றினை மேற்கொண்டு இன்று திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது.

இவ்வாறு இலங்கைக்கு வருகை தந்த போர்க்கப்பலை இலங்கை கடற்படை மரபுகளுக்கு ஏற்ப வரவேற்கப்பட்டதுடன் கப்பலின் கட்டளை தளபதி ஓஹ்சிமா டேருஹிசா இலங்கை கடற்படை கிழக்கு கடற்படை தளபதியுடன் சந்திப்புகளையும் முன்னெடுத்தார்.

 இச் சந்திப்பின் போது இரு நாட்டு கடற்படை கூட்டு ரோந்து மற்றும் பயிற்ச்சி நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இலங்கைக்கு வருகை தந்துள்ள "டி.டி.102 ஹருசாம் "  போர்க்கப்பலானது 151 மீட்டர் நீளமும், 4550 தொன் நிறையும் கொண்டதாக உள்ளதுடன் இக்கப்பலில் 165 அதிகாரிகள் வருகை தந்துள்ளனர்.

மூன்று நாட்கள் இலங்கையில் தரித்து நிற்கும் நோக்கத்தில் இலங்கைக்கு வருகை தந்துள்ள இக்கப்பல் இந்நாட்களில் இலங்கை கடற்படையுடன் கூட்டு கடற்படை பயிற்ச்சிகள் மற்றும் கலை விளையாட்டு நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது, எதிர்வரும் 12ஆம் திகதி போர்க்கப்பல் இலங்கை தீவில் இருந்து தனது அடுத்த துறைமுகத்திற்கான பயணத்தை ஆரம்பிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08