(இராஜதுரை ஹஷான்)

மாணவ ஆலோசனை மற்றும் தேசிய  பாடசாலைக்கான ஆசிரிய பரீட்சையில் சித்தியடைந்த  பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனங்கள் வழங்குவதில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும்.

 அனைத்து பட்டதாரிகளுக்கும் தகுதிக்கேற்ப நியமனங்கள் வழங்கப்படும் என்று ஜனாதிபதி வழங்கியுள்ள வாக்குறுதி நிறைவேற்றப்படும் என விளையாட்டுத்துறை, இளைஞர் விவகாரம் மற்றும் கல்வியமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

நியமனங்கள் மறுக்கபட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர் இன்று கல்வியமைச்சின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களுடன் கலந்துரையாடுகையில்  கல்வியமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மாணவர் ஆலோசனை  மற்றும் தேசிய  பாடசாலை ஆசிரிய பரீட்சையில் சித்தியடைந்த பட்டதாரிகளுக்கு நியமணங்களை வழங்குவதற்கான வர்த்தமானி வெளியிடும் நிலையில் இருந்தது.  அவ்வேளையில் ஆசிரிய சேவையில் காணப்பட்ட பற்றாக்குறைக்காக மாகாண மட்டத்தில் 665பேருக்கு ஆசிரிய நியமணங்கள் வழங்கப்பட்டுள்ளது.

எவ்வாறு இருப்பினும் இந்த பிரச்சினை தொடர்பில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்தும்.

வேலையில்லா பட்டதாரிகளுக்கு  துரிதமாக  நியமணங்களை வழங்க வேண்டும் என்று  ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார் . எமத தேர்தல் கொள்கை பிரகடனத்திலும் இவ்விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியணங்களை வழங்குவது கட்டம் கட்டமாக இடம் பெறும் மிகுதியாகவுள்ளவர்களுக்கு அரச திணைக்களங்கள் மற்றும் அமைச்சுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு நியமணங்கள் வழங்கப்படும்.

நாட்டில் 241000பேர் ஆசிரிய சேவையில் ஈடுப்பட்டுள்ளார்கள். இதில் 60000ம் ஆசிரியர்கள்  ஆரம்ப கல்வியினை  கற்பிக்கின்றார்கள். ஆரம்க கல்வியினை கற்பிக்கும் ஆசிரியர்களில் 15 ஆயிரம் பேர் எவ்விதமான  முறையான  பயிற்சிகளையும் பெறாதவர்களாக  அடையாளப்படுத்தப்பட்டுயள்ளார்கள். இது  கல்வித்துறைக்கு பாரிய பாதிப்பினை ஏற்படுத்தும்.

இலவச கல்வியினை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு காணப்படுகின்றது.

தரமான கல்வியினை போதிக்கும் ஆசிரியர்கள் அனைவரும்  பட்டதாரிகளாக   புலமைப் பெற வேண்டும் என்ற நோக்கில் கல்வியற் கல்லூரியில் வழங்கப்படும் டிப்ளோமா  கற்கை நெறி பல்கலைக்கழகத்தில்  வழங்கப்படும் பட்டப்படிப்பிற்கு இணையாக   மாற்றியமைக்கப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பொதுஜன பெரமுனவின் தேர்தல் கொள்கை பிரகடனத்தில் குறிப்பிட்டதற்கு அமைய அனைத்து பட்டதாரிகளுக்கும் தகுதிகளுக்கு அமைய நியமணங்கள் வழங்கப்படும். தற்போது எழுந்த பிரச்சினை தொடர்பில் கடந்த வாரம்  தொடர்புடைய தரப்பினருடன் பேச்சுவார்த்தையினை முன்னெடுத்துள்ளோம். விரைவில் திருப்திகரமான தீர்வு  பெற்றுக் கொடுக்கப்படும் என்றார்.