முச்சக்கர வண்டிக்கு பதிலாக சிறிய ரக  வாகனத்தை இணக்கப்பாட்டு விலையில் அறிமுகப்படுத்தவுள்ளதாக நிதி அமைச்சர்  ரவி கருணாநாயக்க தெரிவித்திருந்தார்.

தற்போது அந்த புதிய கார் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படவுள்ளதுடன் இதன் மதிப்பு  அமெரிக்க டொலர் 2000 ( இலங்கை ரூபா 3 இலட்சம் ) என தகவல் வெளியாகியுள்ளது. 

எனினும் குறித்த காரின் விலையினை இன்னும் இலங்கை அரசாங்கம் தீர்மானிக்கவில்லை.

குறித்த காரில் மணிக்கு 70 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்க முடிவதுடன் இதில் 5 பேர் பயணிக்க கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளமை விஷேட அம்சமாகும்.  மேலும் 1 லீட்டர் பெற்றோலில் 36 கிலோ மீற்றர் பயணிக்க முடியும்.

உலகில் விலை குறைந்த காராக கருதப்படும் டாடா நனோ இலங்கை பெறுமதியில் 1.4 மில்லியனே ஆகும். 
எனவே அறிமுகப்படுத்தவிருக்கும் குறித்த நான்கு சக்கர வண்டியினை உலகிலே விலை குறைந்த காராக கருதமுடியாமை குறிப்பிடத்தக்கது.