மலையக மக்களின் மாண்பை உறுதிப்படுத்துவோம் அமைப்பு மற்றும் இலங்கை தேசிய கிறிஸ்தவ சங்கமும் இணைந்து 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் 15ம் திகதி சர்வதேச தேயிலை தினத்தினை ஹட்டனில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என மலையக மக்களின் மாண்பை உறுதிப்படுத்துவோம் அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை சக்திவேல் தெரிவித்தார்.

10.12.2019 இன்று ஹட்டனில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இந்த கருத்தை வெளியிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

சர்வதேச மனித உரிமைகள் தினத்திற்கு கொடுக்கின்ற முக்கியத்துவம் சர்வதேச தேயிலை தினத்திற்கு கொடுக்கப்படாமல் இருப்பது கவலைக்குரிய விடயமாகும்.

இந்த தேயிலை தினம் தேயிலை தொழிலாளர்களுடைய வாழ்க்கை வரலாற்றிலேயே பெருமை சேர்க்கின்ற ஒரு தினம் மட்டுமல்லாமல் இந்த மக்களுடைய எழுச்சி நாள், வெற்றி நாள், அதனை உறுதிப்படுத்தும் முகமாக 2005ம் ஆண்டு சர்வதேச தேயிலை தினத்தை சர்வதேசமே அங்கீகரித்தது.

இந்த சர்வதேசம் அங்கீகரித்த பல தினங்கள் மக்கள் மத்தியிலே பிரபல்யமாக இருக்கின்ற இந்த காலகட்டத்தில் சர்வதேச தேயிலை தினம் என்பது அது சார்ந்த தொழிலாளர்களுக்கு தெரியாமல் இருப்பது வேதனைக்குரிய விடயமாகும்.

பொதுவாக அனைத்து தொழிற்சங்கங்களுக்கும், கட்சிகளுக்கும், அரச சார்பற்ற நிறுவனங்களும் இந்த சர்வதேச தேயிலை தினத்தில் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளோம்.

உழைக்கும் மக்களுக்கு கௌரவிக்க வேண்டும். இதனால் அனைத்து தரப்பினருக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே அணைவரும் கலந்து கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.