அபிவிருத்தி பணிகளுக்கு பொதுஜன பெரமுன பொறியியலாளர் சங்கம் முழுமையாக பங்களிக்கும் - ரொஷான் தயாரத்ன 

By R. Kalaichelvan

10 Dec, 2019 | 03:12 PM
image

(இராஜதுரை ஹஷான்)

அரசாங்கம் முன்னெடுக்கும்  அபிவிருத்தி மற்றும் நிர்மாணத்துறை பணிகளுக்கு   ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொறியியலாளர் சங்கம் முழுமையான பங்களிப்பினை வழங்கும்.

இடைக்கால அரசாங்கத்தின் செயற்பாடுகளின் பயனை மக்கள் ஜனவரி மாதம் முதல் அனுபவிப்பார்கள் என பொறியியலாளர் சங்கத்தின் உபதலைவர் ரொஷான் தயாரத்ன தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொறியியலாளர் சங்க காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அரசியல் ரீதியில் நாட்டு மக்கள் சரியான தீர்மானத்தை மேற்கொண்டிருப்பது மகிழ்ச்சிக்குரியது.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுஜன பெரமுன  பொறியியலாளர் சங்கம் இரண்டு மாநாட்டினை நடத்தியது.

மாநாட்டின் போது குறிப்பிடப்பட்ட பல விடயங்களுக்கு  பொதுஜன பெரமுனவின் தேர்தல் கொள்கை பிரகடனத்தில் முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது.

வீதி அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்பு நிர்மாண பணிகள் இன்று பல கேள்வி நிலையினை ஏற்படுத்தியுள்ளது.

திருத்தப்பணிகளில் ஈடுப்படுத்தப்பட்டுள்ள வீதிகள் மிக துரிதகரமாக மக்களின் பாவனைக்கு வழங்கப்பட வேண்டும். அபிவிருத்தி மற்றும் நிர்மாணத்துறை பணிகளில் அரசாங்கத்திற்கு முழுமையான பங்களிப்பினை வழங்க தீர்மானித்துள்ளோம் என சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right