காணாமல் போனவர்களின் உறவினர்கள் சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று யாழ்ப்பாணம்,வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் கவனயீர்ப்பு போராட்டபொன்றை மேற்கொண்டுள்ளனர்.

யாழ்ப்பாணம்

காணாமல் போனவர்களின் உறவினர்கள் இன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டபொன்றை மேற்கொண்டனர்.

வவுனியா

வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக கடந்த 1025 நாட்களாக போராடிவரும் காணாமல்  ஆக்கபட்டவர்களின் உறவினர்களால் கொட்டும் மழையில் கவனயீர்ப்பு போராட்டம் இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.

முல்லைத்தீவு 

இன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் எட்டாம் திகதி ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 1008வது நாளாக தொடர்ந்து வரும் நிலையில் தங்களுடைய உறவுகளுக்கு நீதி கோரி தங்களுடைய உறவுகளுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பாக அரசாங்கம் சர்வதேசம் உடனடியாக பதில் கூற வேண்டும் எனக்கோரி கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

இந்த போராட்டத்தில் முல்லைத்தீவு கிளிநொச்சி வவுனியா மன்னார் யாழ்ப்பாணம் மட்டக்களப்பு திருகோணமலை அம்பாறை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பலர் பங்கெடுத்திருந்தனர்.