செக்குடியரசில் மருத்துவமனையொன்றில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஆறுபேர் கொல்லப்பட்டுள்ளனர்.

செக்குடியரசின் வடகிழக்கு நகரான ஒஸ்டிரவாவில் உள்ள மருத்துவமனையொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்களிற்கு சிகிச்சை வழங்கும் பிரிவிலேயே இந்த சம்பவம்இடம்பெற்றுள்ளது.

 சிவப்பு நிற உடையணிந்தநபர் ஒருவரின் படத்தை வெளியிட்டுள்ள காவல்துறையினர்  துப்பாக்கிதாக்குதலை மேற்கொண்ட அந்த நபர் தப்பிச்சென்றுவிட்டார் என குறிப்பிட்டுள்ளனர்.

இந்ததாக்குதலை தொடர்ந்து மருத்துவமனையிலிருந்து நோயாளர்கள் அனைவரும் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.