இலங்கை தமிழ் அகதிகளிற்கு இந்திய பிரஜாவுரிமையில்லை- மத்திய அரசு அறிவிப்பு

10 Dec, 2019 | 01:07 PM
image

இந்தியாவில் வாழும் இலங்கை தமிழ் அகதிகளிற்கு இந்திய குடியுரிமையை வழங்கப்போவதில்லை என இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்திய நாடாளுமன்றத்தில்  விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் எழுப்பிய கேள்விக்கே இந்திய மத்திய அரசு இந்த பதிலை வழங்கியுள்ளது.

30 ஆண்டுகளிற்கு மேல் இந்தியாவில் வசிக்கும்இந்திய தமிழ் அகதிகளிற்கு இந்திய பிரஜாவுரிமைகிடைக்குமா என அவர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு எழுத்துமூலம் பதிலளித்துள்ள இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர்  நித்தியானந்த ரோய் குடியுரிமை சட்டம்  1955 மற்றும்  குடியுரிமை விதிகள் 2009இன் படி  இந்திய பிரஜாவுரிமை வழங்கப்பட்டுவருவதாக தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமாக குடிபெயர்ந்தவர்கள் இந்த விதிகளின் கீழ் இந்திய பிரஜாவுரிமையை பெற முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை  இந்தியாவில் வாழும் இலங்கை தமிழ் அகதிகளிற்கு  இந்திய பிரஜாவுரிமையைவழங்கவேண்டும் என திமுக வலியுறுத்தியுள்ளது.

இந்திய லோக்சபையில் உரையாற்றிய திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்  டி.ஆர்பாலு இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

இந்திய குடியுரிமை திருத்த  சட்டம் தொடர்பான  சட்ட மூலத்தின் மீதான விவாதத்தின் மீது உரையாற்றுகையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

புதிய குடியுரிமை திருத்த சட்டம்  இந்தியாவில் வாழும் இலங்கை தமிழ் அகதிகளிற்கு  பிரஜாவுரிமையை வழங்க மறுக்கின்றது என டி.ஆர் பாலு  தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழ் அகதிகளிற்கு பிரஜாவுரிமையை வழங்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08