சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் பொகவந்தலாவ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொகவந்தலாவ-செபல்டன் தோட்டத்தில் சட்டவிரோதமான முறையில் மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட  35 - 50 வயதுடைய  ஐவரேயே பொகவந்தலாவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

பொகவந்தலாவ பொலிஸாருக்கு நேற்றிரவு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவலைப்பின்போதே நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யபட்டவர்களிடம் இருந்து மாணிக்கல் அகழ்விற்கு பயன்படுத்தபட்ட உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளதோடு , அவர்களிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிபடத்தக்கது.