நியூசிலாந்தில் எரிமலை வெடிப்பு: 5 பேர் பலி,8 பேர் மாயம்

Published By: Digital Desk 3

10 Dec, 2019 | 11:28 AM
image

நியூ­ஸி­லாந்தின் பிர­பல சுற்­றுலா ஸ்தல­மான வைட் தீவிலுள்ள எரி­மலை உக்­கி­ர­மாகக் குமுற ஆரம்­பித்­துள்ள நிலையில் அந்த எரி­மலைக் குமு­றலில் சிக்கி குறைந்­தது ஐவர் பலியாகியுள்ளதாக  அந்­நாட்டு அதி­கா­ரிகள் தெரி­வித்­தனர்.

பதின்மூன்று பேர் இறந்து இருக்கலாம் என கருதப்படுகிறது, அவர்களில் ஐந்து பேர் இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதோடு, மேலும் எட்டு பேர் இன்னும் தீவில் காணமல் போயுள்ளனர்.

இந்நிலையில், நியூசிலாந்து பொலிசார் இன்று செவ்வாய்க்கிழமை வைட் தீவு எரிமலையில் ஏற்பட்ட வெடிப்பு உயிரிழப்புக்கு எவ்வாறு வழிவகுத்தது என்பது குறித்த குற்றவியல் விசாரணையை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளது.

குறித்த  எரி­மலைப் எரி­மலை குமு­றிய வேளை சுற்­றுலாப் பய­ணிகள் பலர் அந்த எரி­ம­லையின் வாயை நோக்கிச் சென்று கொண்­டி­ருந்­த­தாக அங்­கி­ருந்து வரும் செய்­திகள் தெரி­விக்­கின்­றன.

இந்­நி­லையில் அந்தத் தீவில் சிக்­கி­யி­ருந்த 34 பேர் மீட்புப் பணி­யா­ளர்­களால் பாது­காப்­பாக மீட்­கப்­பட்­டுள்­ளனர். 31 பேர்  வைத்தியசாலையில்  சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த எரி­ம­லையின் குமுறலில் பாதிக்கப்பட்டவர்கள் நியூசிலாந்து, அவுஸ்திரேலியா, சீனா, மலேசியா, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களாவர்.

"வைட் தீவில் உயிரிழப்பு மற்றும் காயங்கள் ஏற்பட்ட சூழ்நிலைகள் குறித்து நாங்கள் குற்றவியல் விசாரணையைத் தொடங்குவோம் என்பதை இப்போது என்னால் உறுதிப்படுத்த முடியும்" என்று நியூசிலாந்து துணை ஆணையர் ஜோன் டிம்ஸ் திங்களன்று ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

வனாரி என அழைக்­கப்­படும் மேற்­படி வைட் தீவா­னது (வெள்ளைத் தீவு) நியூ­ஸி ­லாந்தில் உயிர்ப்­பான எரி­ம­லை­களைக் கொண்ட பிராந்­தி­ய­மாக விளங்­கு­கி­றது.

வைட் தீவில் கடந்த காலங்­களில் அநேக எரி­மலைக் குமு­றல்கள் இடம்­பெற்ற போதும் அவற்றில் சிக்கி எவரும் காய­ம­டைந்­த­தாக அறிக்­கை­யி­டப்­ப­ட­வில்லை. இறு­தி­யாக அங்கு கடந்த 2016ஆம் ஆண்டில் எரி­மலைக் குமுறல் இடம்­பெற்­றது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47